அண்மைய செய்திகள்

recent
-

ஆங்கிலம் தெரியாமல் பிரித்தானியாவிற்கு அகதியாக வந்த இளைஞன்!


சூடான் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் எப்படி பிரித்தானியாவிற்கு வந்தேன், ஏன் தனக்கு இந்த நாடு மிகவும் பிடித்திருக்கிறது என்பது குறித்து கூறியுள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்காவின் Sudan நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு கால்பந்து என்றால் மிகவும் பிரியம், அவருக்கு தான் ஒரு கால்பந்து வீரரானக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது.

இதனால் நாட்டை விட்டு வெளியேறிய அவர் ஒரு சிறிய படகு மூலம் இத்தாலிக்கு வந்துள்ளார். அதன் பின் ஒரு வேன் மூலம் பெல்ஜியம் சென்ற அவர், அங்கிருந்த லாரி ஒன்றில் ஏறி அதிலிருந்த பெட்டிகளின் உள்ளே மறைந்துள்ளார்.
லாரியின் உள்ளே ஒளிந்திருந்தால், சுமார் எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். பசியால் துடித்து வந்துள்ளார்.

அதன் பின் லாரி பிரித்தானியாவின் பிர்மிங்காமில் நின்றுள்ளது. அப்போது லாரியில் இருந்த நபர் பின் பக்க கதவை திறந்த போது, இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன இவர் உடனடியாக அங்கிருந்து ஓடி வந்து முதல் முறையாக பிரித்தானியாவை பார்க்கிறார்.
இதனால் அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தாலும், அங்கு அவர்கள் பேசிய மொழி, பழக்கவழக்கம் ஆகியவை முற்றிலும் அவர் நாட்டிற்கும், பிரித்தானியாவிற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்துள்ளது.
இதன் காரணமாக நாம் இங்கு எப்படி வாழப்போகிறோம் என்று நினைத்த போது, பசி அவரை வாட்டியுள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் கூட எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு அரேபிய மொழி பேச தெரிந்த நபர் ஒருவர் இருவருக்கு உதவியுள்ளார். அதன் பின் அவரிடம் அகதி உரிமை பெறுவதற்கு அதற்கு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்ட போது, அவர் Croydon பகுதியில் நடக்கும் என்று கூறி அதற்கான விண்ணப்பப்படிவம், எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்பது தொடர்பான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
அதன் பின் அவருக்கு பிரித்தானியாவில் நாம் தங்கிவிடுவோம் சமாளித்துவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் 5 வருடம் அகதியாக தங்கலாம் என்று கூறப்பட்டதால், உடனடியாக மான்செஸ்டர் பகுதிக்கு வந்துள்ளார்.
தொலைக்காட்சியில் பார்த்தவைகளை நேரில் பார்த்த போது அவரால் நம்பவே முடியவில்லை, சுமார் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அப்போது அவருக்கு Red Cross என்ற அமைப்பு படிக்க உதவியுள்ளது. அதன் மூலம் கால்பந்திற்கு நடுவராவதற்கான படிப்பை படித்து தேர்வு எழுதியுள்ளார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தான் இதில் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ்களையும் வாங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிரித்தானியா எனக்கு மிகவும் பிடிக்கும், இங்கிருந்த சிலர் எனக்கு உதவினர். எனக்கு கால்பந்தின் மீது மிகவும் ஆர்வம் அதிகம், இதனால் உலக்கோப்பை போட்டியில் எப்படியாவது நான் அங்கு நிற்க வேண்டும், ஐ லவ் யூ பிரித்தானியா என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தன் நாட்டை விட்டு வெளியேறி இங்கு அகதியாக வந்துள்ளார்.
ஆங்கிலம் தெரியாமல் பிரித்தானியாவிற்கு அகதியாக வந்த இளைஞன்! Reviewed by Author on February 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.