அண்மைய செய்திகள்

recent
-

மன்-எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மா-வி வருடாந்த மெய்வல்லுனர் போட்டி-வடக்கு மாகாண ஆளுனர்

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மாகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (10.02.2019) இதன் வித்தியாலய அதிபர் எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் நடைபெற்றபொழுது இதற்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கலந்து கொண்டார்.

இவ் நிகழ்வில் விஷேட விருந்தினர்களாக வட மாகாண கல்வி, கலாச்சார,
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார செயலாளர் எஸ்.சத்தியசீலன்,
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் K.J.பிறட்லி உட்பட பலர் இவ்
நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு கலந்து கொண்ட  வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் உரையாற்றுகையில்
வட மாகாண கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார செயலாளர் எஸ்.சத்தியசீலன் நான் எந்நேரமும் இரவு பகல் என்று பாராது அவருடன் தொடர்பு கொள்ளும்பொழுது எனக்கு பதிலளிப்பது மாத்தரமல்ல வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் நிலவும் அதிகமான பிரச்சனைகளுக்கு தீர்வை அவர் மேற்கொண்டு வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.

விழுந்த தேசத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எழுப்ப வேண்டும் என்பது எனது நோக்கம். கடந்த மாதம் 09 ந் திகதி (09.01.2019) நான் வடக்கு மாகாண
ஆளுனராக பதவி ஏற்று ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.

நான் ஒரு கல்விமானாக இருப்பதாலே அநேக நண்பர்கள் என்னை கேலி செய்தார்கள். விழுந்துவிட்ட ஒரு அரசாங்கத்தில் விழப்போகின்ற ஒரு அரசாங்கத்தில் சாக்கடையில் நீயும் விழுந்து விட்டாயா என்று. இந்த கேள்விக் கனைகள் இன்னும் எனக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

நான் இவர்கள் சொல்லும் கூற்றுக்கு கொடுக்கின்ற மறுமொழி என்னவென்றால் எல்லாவிதமான தர்மங்களும், எல்லாவிதமான கூற்றுக்களும் ஒன்றை மட்டுமே சொல்லுகின்றது.

அதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் ஒவ்வொரு நேரத்தையும் சமூதாய விழும்பிலே இருக்கின்ற மக்களுக்கு செய்கின்ற சேவையை செவ்வணே செய் என்றுதான் வேதம் எமக்கு சொல்லுகின்றது.

அது அரசு, அரசு சார்பற்ற, தனியார் என்ற வேறுபாடு இன்றி எனக்கு கீழே
இருக்கும் நாளைய எதிர்பார்ப்பை தாங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கும்
அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஏதேயொரு உதவி ஏதேயொரு படிக்கல், ஏதேயொரு கூரை கட்டக்கூடிய  சந்தர்ப்பம் கிடைக்குமாகில் அதை நான் இறைவனுக்கு செய்யும் ஒரு பணியாக ஏற்றுக் கொள்ள இருக்கின்றேன்.

ஏனெனில் மக்கள் சேவையே அது மகேசன் சேவை. ஐந்து முறை இறைவனை வழிபடும் கலாச்சாரம் இஸ்லாமிய கலாச்சாரமாகும். அந்த ஐந்து முறையும் இறைவனை வழிபடும்போதும் உங்கள் உடல் உள்ளம் ஆன்மாவை தூய்மைபடுத்த வேண்டும் என்று புனித அல்குரான் எமக்கு சொல்லுகின்றது.

நான் அறிந்தவகையில் இதே அல்குரான் இன்னும் இரண்டு விடயங்களை எமக்கு சொல்லுகின்றது. தொழுவதற்கு முன் உன் அயலானிடம் உள்ள பகையை நீ தீர்த்துக் கொள்ள வேண்டும். சகோதரங்களுடன் நீ வைத்திருக்கின்ற வைராக்கியத்தை நீ சுமந்து கொண்டு நீ தொழுகைச் செய்யும்போது உன் தொழுகை இறைவனால் அது ஏற்றுக் கொள்ளப்படாது என கூறப்படுகிறது.

அத்துடன் தொழுகை நேரத்தில்கூட பசியோடு இருப்பவர், பட்டினியுடன்
இருப்பவர், பஞ்சத்தில் இருப்பவர், வேதனையுடன் இருப்பவர், தேவையில்
இருப்பவர் யாரேனும் இருப்பின் அவர்களை சந்திப்பின் அது தொழுகையைப் போன்று ஒரு புனிதமானது என அல்குரான் சொல்லுகின்றது. ஆகவே மக்களுக்கான சேவையை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்த
விதத்திலும் நாம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இது பெப்ரவரி மாதமாக இருப்தாலேயே வட மாகாணத்தில் 1008 பாடசாலைகளிலுள்ள சுமார் 300 பாடசாலைகளிருந்து எனக்கு அழைப்புக்கள் வந்துள்ளன. ஆனால் நான் இந்த பாடசாலையின் இவ் நிகழ்வுக்கு கலந்து கொள்ள ஒரு காரணியுண்டு. அது எமது இனங்களுக்கடையே ஏற்படக்கூடிய ஏற்பட வேண்டிய உடைக்க முடியாத ஒரு உறவு பாலத்தை நாங்கள் சரிபண்ண வேண்டும். தமிழ் எமது மொழி. ஆந்த மொழியின் கீழ் வாழும் மக்களாக இருக்கின்றோம்.

ஒருபுறம் இறை வேதத்தையும் மறுபுறம் அல்குரானையும் இன்னொருபுறம் புனித வேதாகமத்தையும் கொண்ட மூன்று வெளிச்சங்கள் எமது சமூகத்துக்கு வெளிச்சமாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாம் ஒரே கூரையில் இருந்து தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியிலே எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை nஐயம் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எமக்கு விட்டுள்ளது.

ஆகையினாலே மன்னார் ஒரு ஓரப்பட்ட மாவட்டம் என்றும் ஒதுக்கப்பட்ட மாவட்டம் என்ற அதே நிலையில் மன்னார் தனது ஆன்மாவை திருப்திப்பட்டுக் கொண்டிருக்கின்றது அல்லது தைரியப்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது எமக்கு தெரியவருகின்றது. இந்த பாடசாலை 75வது வருடத்தை கொண்டாடுகின்றது. அது
சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர என்ற தென்னிலங்கையில் பிறந்த ஒரு சிங்களவர் அதிபராக இருந்தபொழுது ஏற்படுத்தப்பட்ட பாடசாலை இது.

அவர் தனது பொருளாதார நிலையினாலே ஒரு பெரிய பாடசாலையில் படிக்க முடியாத நிலையினாலே அவர் ஒரு மிஷனரி பாடசாலையில் சேர்க்கப்பட்டார். ஒரு வெளிநாட்டவர் அவருக்காக நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கி கல்வியை கொடுப்பதற்காக முன் வந்தார்.

அந்த தாக்கம் அவருக்கு இனம், மதம் என்ற வேற்றுமைக்கு அப்பால் காணக்கூடிய மனிதனாக அவரை மாற்றியது. அவர் யாழ் பகுதிக்கு வந்து அங்கு கல்விக் கற்றார். ஆகவே கல்வி என்பது எமது கண்ணை திறக்க வேண்டிய மையமாக இருக்கின்றது என கன்னங்கர எமக்கு காட்டியுள்ளார்.

நான் இவ் பாடசாலைக்கு இன்று வருவதற்கு இன்னொரு காரணியும் உண்டு. நானும் உங்களைப்போன்றே ஒரு சிறிய பாடசாலையில் கல்விப் பயின்றவன். பணமோ சமூதாய உறவுகளோ அரசியல் செல்வாக்கோ இல்லாமல் நான் முன்வந்தவன். கல்வியை மட்டும் நம்பியவன் நான். கல்வி ஒன்றே எம்மிடமிருந்து பறிக்க முடியாத செல்வமாக இருக்கும். இன்று நான் ஆளுனராக இருக்கும்போது முப்படை தளபதிகள் வீரர்கள் எனக்கு முன்னால் வந்து கௌரவம் செய்யும்போது நான் அந்நேரம் ஒவ்வொரு நிமிடமும் என் ஆன்மாவுக்குள் நான் கௌரவம் கொடுப்பது எனக்கு கற்பித்த ஆசான்களுக்கும் எனது பாடசாலைக்கு மட்டுமே.

விழுந்து விழுந்து எழும்பும்போது அந்த ஒவ்வொரு ஆசானும் தூக்கிவிட்ட அந்த ஆசானுக்குத்தான் நாம் நன்றிகூற வேண்டும். இந்த பாடசாலை ஒரு சிறிய பாடசாலை கல்வியில் உயர்ந்தது என அதிபர் சொன்னார். 80 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி 20 பேர் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நான் சொல்லுவது மேகங்கள் போன்று எமக்கு முன்னால் பல சாட்சிகள் உண்டு. அந்த சாட்சிகளுக்கு கீழே நாம் ஓடக்கூடிய ஒரு இலக்கு உண்டு.

வேகமாகவும் விழாமலும் அந்த இலக்கை நோக்கி நாம் ஓட வேண்டும். அந்த எல்லை ஐனநாயகம், நியதியான பார்வை, ஆன்மீகமான உலகம். இந்த மூன்று பாதைகளிலும் நாம் ஓடி இலங்கை தாய் திருநாட்டிலே ஒரேயொரு கொடியின் கீழ் ஒருநாளும் பிரிக்கக் கூடாத பிளவுப்படக் கூடாத ஒரு தனிநாட்டில் சுதந்திர
முழுப்பிரஜைகளாக வாழ வேண்டிய சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நாம் திரும்ப திரும்ப ஓட வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆகவே பாடசாலைகளை மையமாக வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளே உங்கள் பெற்றோரின் அன்பை குறைவில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளை அள்ளி வாரிக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் பாசமாக இருங்கள். இயற்கைக்கு காதல் கொள்ளுங்கள். உங்கள் கலாச்சாரத்தையும் உங்கள் பண்பையும் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உலகம் உங்கள்பால் திரும்பி
பார்க்கும். நான் கௌரவம் வழங்குகின்ற அப்துல் கலாம் சொல்வது போன்று கனவு என்பது நாங்கள் நித்திரை கொள்ளும்போது காண்பது அல்ல. உண்மையான கனவு என்றால் நாம் நித்திரைக்கு போகாமல் இருப்பதே கனவு. ஆகவே கனவு காண்போம். எமது கனவை நாம்
அறிவோம் இவ்வாறு தெரிவித்தார்.











மன்-எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மா-வி வருடாந்த மெய்வல்லுனர் போட்டி-வடக்கு மாகாண ஆளுனர் Reviewed by Author on February 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.