அண்மைய செய்திகள்

recent
-

கண்புரை நோயில் இருந்து விடுபட வேண்டுமா? இதை செய்திடுங்க -


கண்புரை (cataract) என்பது கண் வில்லையில் ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை என்று சொல்லப்படுகின்றது.
இதனை பெரியோர்கள் கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு.

கண்புரை நோயானது சர்க்கரை நோய், மரபணுக்கள், முதுமை, கண்களில் காயங்கள், அதிகப்படியான சூரிய வெளிச்சத்தைக் காண்பது, மது அதிகம் அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணிகளால் அதிகம் வரும்.
அந்தவகையில் கண்புரை நோயில் இருந்து விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  • 1 கப் ரோஜாப் பூ இதழ்கள் மற்றும் 4 டீஸ்பூன் ராஸ்ப்பெர்ரி இலைகளை, 4 கப் சுடுநீரில் போட்டு நன்கு ஊற வைத்து, நீர் குளிர்ந்த பின், அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண் பார்வை மேம்படும்.
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ்வாட்டரை ஒன்றாக கலந்து, கண்களில் 4 துளிகள் விட்டு, உடனே முகம் மற்றும் கண்களை நீரில் கழுவ வேண்டும். இப்படி கண்புரையின் ஆரம்ப காலத்தில் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • தினமும் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதுவும் கண்புரை பிரச்சனையில் இருந்து விடுவிக்குமாம்.
  • தினமும் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை உட்கொண்டு வர, கண்புரையின் அபாயத்தை 40% வரை குறைக்கலாம்.
  • ஒரு துளி நல்ல சுத்தமான தேனை கண்களில் விடுவதன் மூலம், கண்புரை நோயை சரிசெய்யலாம். ஆனால் தேன் சுத்தமானதாக, கலப்படம் இல்லாததாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பார்வையை இழக்கச் செய்துவிடும்.
  • தினமும் நீரில் ஊற வைத்த பாதாம் மற்றும் ஒரு டம்ளர் பாலை காலையில் குடித்து வந்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதோடு, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், அவற்றில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனைகளைத் தடுக்கும்.
கண்புரை நோயில் இருந்து விடுபட வேண்டுமா? இதை செய்திடுங்க - Reviewed by Author on February 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.