அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிலாபத்துறையில் ஆறாவது நாளாகவும் தொடரும் நில மீட்பு போராட்டம்-படங்கள்

மன்னார் சிலாபத்துறை பகுதியில் கடற்ப்படையினர் அபகரித்து வைத்திருக்கும்பொது மக்களின் தம் பூர்வீக காணியை விடுவிக்கக்கோரி கடந்த புதன் கிழமை  20.02.2019 தொடக்கம் சிலாபத்துறை மக்களால் நடாத்தி வரும் தொடர்போராட்டமானது இன்று திங்கள் கிழமையுடன் 25.02.2019 ஆறாவது நாட்களாக நடைபெற்று வருகின்றன.

1990 ஆம் ஆண்டு இவ் பகுதி மக்கள் புலம்பெயர்ந்த பின்னர் கடற்படையினர் இவ் பகுதிமக்களின் சுமார் 36 ஏக்கர் பூர்வீக காணியை  ஆக்கிரமித்து அதில் முகாம் அமைத்து  செயற்பட்டு வருகின்றனர்.

புலம்பெயர்ந்த மக்கள் இவ் பகுதியில் மீள்குடியேறி வருகின்றபோதும் இவ்
காணிகளுக்கு சொந்தமான பூர்வீக  218 குடும்பங்கள் மீள்குடியேற முடியாது
தவித்து வருவதால் இவ் காணியை விடுவிக்கக் கோரியே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ் காணியை விடுவிக்கக்கோரி பல தரப்பட்ட முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டபோதும் அதற்கான ஒழுங்கான பதில் இதுவரை கிடைக்கப் பெறாமையாலே இவ் மக்கள் சிலாபத்துறை கடற்படை முகாமுக்கு முன்னால் தங்கள் காணியை விடுவிக்கக்கோரி தங்கள் தொடர் போராட்டத்தை இன்றுடன் 25-02-2019 ஆறாவது நாட்களாக  முன்னெடுத்துச் செல்லுகின்றனர்.

ஆண் பெண்கள் என இருபாலாரும் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் போராட்டத்துக்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டு நிறுவனம் (மெசிடோ) போன்ற அமைப்புக்கள் இவர்களின் போராட்டங்களுக்கான ஆதரவுகளை வழங்கியும் வருவதுடன் அரசியல் தலைவர்களும் மதப் பெரியார்களும் இவர்களின் இடங்களுக்குச் சென்று இவர்களின் போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றனர்.



மன்னார் சிலாபத்துறையில் ஆறாவது நாளாகவும் தொடரும் நில மீட்பு போராட்டம்-படங்கள் Reviewed by Author on February 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.