அண்மைய செய்திகள்

recent
-

15 நொடியில் பறிபோன 173 உயிர்கள்: பிரித்தானிய அரசால் மறைக்கப்பட்ட உண்மை சம்பவம் -


மத்திய லண்டனில் அமைந்துள்ள பெத்னால் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கொடூர விபத்திலேயே 173 பிரித்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலக யுத்தம் நடந்த 1943-ல் வான்படை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

அப்போது எச்சரிக்கை நடவடிக்கையாக உயிருக்கு அஞ்சிய சுமார் 300 பேர் கொண்ட குழு ஒன்று பெத்னால் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் பதுங்கியுள்ளது.

இந்த நிலையில் ஏணிப்படிகளில் ஒரு தாயாரும் மகனும் தடுமாற, 15 நொடிகளில் இந்த அசம்பாவிதம் நடந்து முடிந்துள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 173 பேர் கொல்லப்பட சிலர் உயிர் தப்பியுள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறார்களும் என கூறப்படுகிறது.

இன்று 76-வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் நிலையில், பிரித்தானிய வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட பேரிடர் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் திகதி இரவு 8.17 மணியளவில் இந்த பேரிடர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜேர்மன் மற்றும் இத்தாலிய வான்படைகளின் தாக்குதல் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இதில் கலவரமடைந்த மக்கள் அப்போது பயன்பாட்டில் இல்லாத இந்த சுரங்க ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
மட்டுமின்றி வான் தாக்குதலுக்கான எச்சரிக்கை மணியும் ஒலித்ததால் பொதுமக்கள் இதை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று முக்கிய வாசல் பகுதியில் பெரும் சத்தம் கேட்டுள்ளது. மக்கள் வெடிகுண்டு என்றே கருதியுள்ளனர்.
ஆனால் அந்த சம்பவம் வெறும் 15 நொடிகளில் பிணக்குவியலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட 27 ஆண்கள், 84 பெண்கள் மற்றும் 62 சிறார்கள் என மொத்தம் 173 பேரையும் மொத்தமாக அடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



15 நொடியில் பறிபோன 173 உயிர்கள்: பிரித்தானிய அரசால் மறைக்கப்பட்ட உண்மை சம்பவம் - Reviewed by Author on March 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.