அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வர சம்பவம்-சர்வமத பேரவையில் இருந்து வெளியேறுகின்றது மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள்-(படம்)



மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பணி இடம் பெற்ற போது இரு மதத்தினருக்கிடையில் இடம் பெற்ற முறண்பாடுகளைத்தொடாந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மன்னார் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளனர்.

பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த குறித்த வளைவு துருப்பிடித்திருந்த நிலையில் அதனை மாற்றி  புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை 03-03-2019 மாலை ஈடுபட்டிருந்தனர்.

எனினும் அப்பகுதிக்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன்  திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குள்   உள் நுழையும் வளைவுகள் முழுவதையும்  அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதன் போது ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள் உற்பட பலர்  குறித்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். புதிதாக வளைவை அமைக்கவிடாது அதனை உடைத்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் வருகை தந்து இரு தரப்புனருடனும் கலந்துடையாடிய நிலையில்,மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை 05-03-2019 மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட சர்வமத பேரவையில் இருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேறுவதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவித்துள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு  மாற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முழு முதற்கடவுள் சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம்   அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது.

 எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையில் இருந்து செயல்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்துக்குருமார் பேரவை இந்துக் குருமார்கள் வெளியேறிக் கொள்ளுகின்றோம்-என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வர சம்பவம்-சர்வமத பேரவையில் இருந்து வெளியேறுகின்றது மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள்-(படம்) Reviewed by Author on March 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.