அண்மைய செய்திகள்

recent
-

அபார இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த வில்லியம்சன்!


நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
நியூசிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஹாமில்டனில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி தமிம் இக்பாலின்(126) சதத்தின் உதவியால் 234 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 451 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜீத் ராவல் 132 ஓட்டங்களும், டாம் லாதம் 161 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆன நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன் 93 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வில்லியம்சன்-வாக்னர் இருவரும் 3வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தனர். வில்லியம்சன் டெஸ்டில் 20வது சதம் கடந்தார். அணியின் ஸ்கோர் 449 ஆக உயர்ந்தபோது வாக்னர் 47 ஓட்டங்களில் அவுட் ஆனார்.


அதன் பின்னர் வந்த வாட்லிங் தனது பங்குக்கு 31 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். எனினும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் அபாரமாக இரட்டை சதம் விளாசினார். மேலும், டெஸ்டில் மிக வேகமாக(71 போட்டிகள்) 6 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அத்துடன் கடந்த 8 டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் 900 ஓட்டங்களை குவித்துள்ளார். அவருக்கு துணையாக நின்று விளையாடிய கிராண்ட்ஹோம் 53 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தார். அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 715 ஆக இருந்தபோது நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது.

டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் 690 ஓட்டங்கள் குவித்ததே நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
வில்லியம்சன் 200 ஓட்டங்களுடன் (19 பவுண்டரிகள்) களத்தில் இருந்தார். அதன் பின்னர் 481 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தமிம் இக்பால்-இஸ்லாம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ஓட்டங்கள் எடுத்தது.
இஸ்லாம் 37 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், அதன் பின்னர் வந்த மொமினுல் ஹக், மிதுன் இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் 74 எடுத்த தமிம் இக்பால் சவுதியின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சவுமியா சர்கார் 39 ஓட்டங்களுடனும், மஹ்மதுல்லா 15 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வங்கதேச அணி 307 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.

அபார இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த வில்லியம்சன்! Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.