அண்மைய செய்திகள்

recent
-

268 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிகச்சிறிய குழந்தை: இப்போது எப்படி இருக்கிறது? -


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் சுமார் 268 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிகச்சிறிய குழந்தை தற்போது நலமாக உடல்நலம் தேறியுள்ளது.
சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை மிகவும் சிறியதாக இருந்தது. கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் குழந்தை இருந்தது.

24 வார கருவாக இருந்தபோது பிரசவிக்கப்பட்ட இந்த ஆண் குழந்தை, கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு பின்னர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை மூலம் தேறியுள்ளது.

தற்போது அந்த குழந்தை 3.2 கிலோ எடையுடன் உள்ளது. இதுகுறித்து தாய் தாய் கூறியதாக டோக்கியோ கூறியதாவது, எனது மகன் பிழைப்பான் என நான் நம்பிக்கை அடையவில்லை. தற்போது அவன் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு கிலோ எடைக்கு கீழ் ஜப்பானில் பிறக்கும் குழந்தைகளில் 90% உயிர்பிழைத்துவிடும். ஆனால் 300 கிராமுக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளில் 50% மட்டுமே உயிர் பிழைக்கின்றன என கியோ பல்கலைக்கழக மருத்துமனை தெரிவித்துள்ளது.


268 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிகச்சிறிய குழந்தை: இப்போது எப்படி இருக்கிறது? - Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.