அண்மைய செய்திகள்

recent
-

முருங்கன் பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலத்துக்கு நானாட்டான் பிரதேச செயலாளர் 30 ஏக்கர் காணி ஒதுக்கீடு

மன்னார் பெருந்நிலப்பரப்பில் கால்நடை மேய்ச்சல் நிலம் இன்மையால் அதிகமான கால்நடை இறக்கும் தருவாயில் சென்று கொண்டிருப்பதாகவும் இதனால் கால்நடை வளர்ப்போர் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவிடம் முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.சிறீஸ் கந்தகுமார் முப்பது ஏக்கர் காணியை மேய்ச்சல் நிலத்துக்கு ஒப்படைப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவிடம் உறுதிமொழி அளித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 25
ஆயிரம் கால்நடை இருப்பதாகவும் இவற்றுக்கு மேயச்சல் நிலம் இன்மையால் நாளாந்தம் கால்நடை இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் இதனால் கால் நடை வளர்ப்போர் பாதிப்ப அடைந்து வருவதாகவும் இப்பகுதி கால்நடை வளர்ப்போர் பல இடங்களிலும் தங்கள் கவலைகளை தெரிவித்து வந்தனர்.

இவ் முறைபாடு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவிடமும் முறையீடு
செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய செவ்வாய் கிழமை (19.03.2019) மன்னார்
மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞாணப்பிரகாசம் அடிகளார்
தலைமையில் இதன் ஆளுநர் சபை உறுப்பினர்கள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பி.பரஞ்சோதி, நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.சிறீஸ் கந்தகுமார் மற்றும் கால்நடை சங்க பிரதிநிதிகளை நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் சந்தித்து இதற்கான தீர்வினை பெறுவதற்கான கூட்டம் ஒன்றை நடாத்தினர்.
இக் கூட்டத்துக்கு கால்நடை அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர், நீர்பாசன
பொறியியலாளர் (மத்திமம்), மாவட்ட வன பரிபாலன திணைக்கள அதிகாரி
ஆகியோருக்கும் அழைப்பிதழ் விடுக்கப்பட்டும் இவர்கள் இதில் கலந்து
கொள்ளவில்லை.

இவ் கூட்டத்தில் ஏற்கனவே பாவனைக்கு இருந்து வந்த மேய்ச்சல் நிலங்களில் அடாத்தாக விவசாயம் செய்வதாகவும் வன இலாக இவ் மேய்ச்சல்  இடங்களை தங்கள் வசப்படுத்தி வைத்திருப்பதாலுமே மேய்ச்சல் நிலப் பிரச்சனை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமான பிரச்சனையை பேசித் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட முக்கிய
அதிகாரிகள் வருகை தராதபோதும் நானாட்டான் பிரதேச செயலாளருக்கு கீழ்
கொண்டுவரப்பட்டுள்ள முப்பது ஏக்கர் காணியை முருங்கன் கால்நடை மேய்ச்சல் நிலத்துக்கு வழங்குவதற்கு  நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.சிறீஸ் கந்தகுமார் மன்னார் மாவட்ட பிரதேச தவிசாளர், மன்னார் பிரiஐகள் குழு மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கத்துக்கு முன்னிலையில் இவ் உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.






முருங்கன் பகுதியில் கால்நடை மேய்ச்சல் நிலத்துக்கு நானாட்டான் பிரதேச செயலாளர் 30 ஏக்கர் காணி ஒதுக்கீடு Reviewed by Author on March 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.