அண்மைய செய்திகள்

recent
-

ஜெனீவாவில் புதிய வரைபு யோசனை! இணை அனுசரணையாளராக இலங்கை -


இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜெனீவாவில் புதிய வரைபு யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இந்த புதிய வரைபு யோசனையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கையும் இணை அனுசரணையாளராக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய யோசனையின்படி இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் மேம்படுத்தல் திட்டங்கள், தொழிநுட்ப உதவிகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் அடங்கவுள்ளன.
ஜெனீவா யோசனையின் இணை அனுசரணையாளர் நிலையில் இருந்து இலங்கை விலகிக் கொள்ளப் போவதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்த ஒரு வாரக்காலப் பகுதியிலேயே புதிய யோசனையிலும் இலங்கையின் அனுசரணை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை வலியுறுத்தியே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
இதேவேளை இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் எதிர்வரும் செவ்வாய் கிழமை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளன.
அத்துடன் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனீவாவில் புதிய வரைபு யோசனை! இணை அனுசரணையாளராக இலங்கை - Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.