அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலம் நுழைவாயில் பகுதியில் இடம் பெற்று வந்த கலாச்சார சீர் கேடுகளை தடுக்கும் வகையிலே'சுற்றுலா பூங்கா' ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்(PHOTOS)

மன்னார் பிரதான பாலம் நுழைவாயில் பகுதியில் அண்மைக்காலமாக இடம் பெற்று வந்த கலாச்சார சீர் கேடுகளை தடுக்கும் வகையிலே மன்னார் நகர சபையினால் குறித்த பகுதியில் 'சுற்றுலா பூங்கா' அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (14) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,

குறித்த பகுதியில் கடும் பற்றைகள் காணப்பட்டதோடு,அங்கு சமூக விரோத மற்றும் கலாச்சார சீர்கேடுகள் இடம் பெற்று வருவதாக சமூக ஆர்வளர்களினால் மன்னார் நகர முதல்வரின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்த போது பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள் இடம் பெற்றமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் மன்னார் நகர சபையின் பணியாளர்களை வைத்து குறித்த பகுதியில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது குறித்த பகுதியில் சுத்தம் செய்யப்பட்டு அழகுப்படுத்தி,மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் குறித்த பகுதியை கடற்கரை பூங்காவாக அமைக்க மன்னார் நகர சபைக்கு 83 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன் போது இடம் பெற்ற பல்வேறு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கதைக்கப்பட்டிருந்தது.அப்போது மன்னார் பிரதேச சபையினர் கலந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் குறித்த இடம் மன்னார் பிரதேச சபையின் எல்லை என்று அவர்களுக்கு தெரியாதா?

அப்போது மௌனமாக இருந்து கொண்டு தற்போது நிதி வந்தவுடன் அதனை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இடம் சார்ந்த கடற்பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் மன்னார் நகர சபை பிரிவைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக பள்ளிமுனை, பனங்கட்டிக்கொட்டு,பெரிய கடை கிராமங்களைச் சேர்ந்தவர்கள். குறித்த இடம் மண் போடு நிறப்புவதற்கு முன்னர் குறித்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த எல்லை பெரிய கடை கிராம அலுவலகர் பிரிவின் எல்லையாக கருதப்படுகின்றது.குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவருமே மன்னார் நகர சபை பிரிவைச் சேர்ந்தவர்கள்.

குறித்த பகுதியில் மன்னார் பிரதேச சபை பிரிவைச் சேர்ந்த யாரும் குடி இருப்பவர்களாக இல்லை.மன்னார் நகர பகுதியின் ஓர் எல்லையை பிரதேச சபையினுடையது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.




மன்னார் பிரதான பாலம் நுழைவாயில் பகுதியில் இடம் பெற்று வந்த கலாச்சார சீர் கேடுகளை தடுக்கும் வகையிலே'சுற்றுலா பூங்கா' ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்(PHOTOS) Reviewed by Author on March 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.