அண்மைய செய்திகள்

recent
-

அபிநந்தன் ஓட்டிய மிக் 21 "அது பறக்கும் சவப்பெட்டி’- எத்தனை உயிர்களை காவு வாங்கியது தெரியுமா..?


பாகிஸ்தானில் அபிநந்தன் சிக்க காரணமாக இருந்தமிக்-21 ரக போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி வாங்கி உள்ளது என்ற அதிர்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ”இந்து தமிழ் திசை” நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 1966-ம்ஆண்டில் ரஷ்யா விடம் இருந்த இந்தியாவால் வாங்கப்பட்டது மிக்-21 ரக போர்விமானங்கள். அந்த காலகட்டத்தில் உலகின் தலைசிறந்ததாகவும் பெருமை வாய்ந்ததாகவும்அமைந்திருந்தன.

தொடர்ந்து, காலப் போக்கில் அதற்கு தேவையான நவீன ரக குண்டுகளும், அதற்கான எலக்ட்ரானிக் கருவிகளும் மிக்-21 விமானத்திற்குமுழுமையாகப் பொருந்தபடவில்லை. இதன் பழமையான தொழில்நுட்பம் உள்ளிட்டப் பலகாரணங்களால பலசமயம் மிக்-21 விமானத்தில் அதிக கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பலநேரங்களில் இது விபத்தை ஏற்படுத்துவதாகவே இருந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற ஜூனியர் வாரண்ட் அதிகாரியான எஸ்.வரதராஜன் தெரிவித்ததாவது,‘‘பறக்கும் நிலையில் மிக்-21 இஞ்சின் திடீர் என அணைந்தால் இருகையில் உள்ள பட்டனைஅழுத்தியதும், விமானத்தின் மேல்புறக் கதவு திறந்து அதில் தனது இருக்கையுடன் விமானிமேலே வெளியேறி விடுவார்.

இந்த வகை போர்விமானம், பயிற்சியின் போது சிலநேரங்களில் விபத்துக் குள்ளாகி விடுகிறது. இதன் காரணமாக அதற்கு ராணுவத் தினர்‘பறக்கும் சவப்பெட்டி’ என்று, அழைக்கின்றனர்.
மேலும், மிக்-21 விமானம் விபத்துக்குள்ளானால் ராணுவத்தில் பல கோடி ரூபாய் வீணாகின்றது, எனப் பேச்சு எழுகிறதே தவிர அதில் பலியானவிமானியின் உயிர் பற்றி கவலைப்படுவோர் மிகவும் குறைவு’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2012ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தஏ.கே.அந்தோணி இது குறித்து தெரிவிக்கையில். அதில் ஏப்ரல் 19, 2012 வரையில் மிக்-21ரக போர்விமானத்தால் 171 விமானிகளும், 39 பொதுமக்களும் பலியானதாகக் கூறினார்.
மிக்-21ரக விமானங்களின் கோளாறுகளை கார்கில் போருக்கு பின் மாற்றம் செய்ய அப்போதைய பிரதமர்வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கருத்தில் கொண்டது. இதில் ஒரு சிறந்த வகைவிமானமாகக் கருதப்பட்டதுதான் தற்போது இந்தியாவில் பெருமளவில் பேசப்பட்டு ஊழல்புகாரில் சிக்கியுள்ள ரஃபேல் போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Thehindu
அபிநந்தன் ஓட்டிய மிக் 21 "அது பறக்கும் சவப்பெட்டி’- எத்தனை உயிர்களை காவு வாங்கியது தெரியுமா..? Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.