அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாய் கிரகத்தில் நிலக்கீழ் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு -


செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் முதன் முறையாக நீலக்கீழ் நீர் அக் கிரகத்தில் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட Mars Express Orbiter எனும் விண்கலம் தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றது.
தற்போதும் இவ் விண்கலமே நிலக்கீழ் நீர் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளது.

இப் புகைப்படங்களை ஆராய்ந்த Utrecht பல்லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிலக்கீழ் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த புகைப்படங்களில் ஒன்றில் நிலத்தின் மேற்பகுதியில் சகதி போன்ற அமைப்பு காணப்படுகின்றது.
நீர்த்தன்மை காணப்பட்டாலே சகதி உருவாக்கும் சாத்தியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4,000 தொடக்கம் 5,000 மீற்றர்கள் ஆழத்தில் நீர் காணப்படலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நிலக்கீழ் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு - Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.