அண்மைய செய்திகள்

recent
-

வெனிசுலா விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த பிரித்தானியா-பிரான்ஸ்! தோல்வியடைந்த தீர்மானம் -


வெனிசுலா விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டு வந்த தீர்மானங்களை, வீட்டோ அதிகாரம் கொண்ட பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் முறியடித்தன.

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிகோலஸ் மடுரோ ஜனாதிபதியாக பதிவியேற்ற நிலையில், ஜூவான் குவைடோ தன்னை தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார்.

அவருக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து வரும் மனிதாபிமான உதவிகள் மடுரோ ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில், வெனிசுலாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செல்லக்கூடிய மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் ஆகிய அம்சங்கள் அடங்கிய தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது.

ஆனால் ரஷ்யா-சீனா நாடுகளின் வீட்டோ அதிகாரத்தின் மூலம் இந்த தீர்மானத்தை எதிர்த்ததால் நிறைவேறவில்லை. பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரஷியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்த்தன.
ஆனால் ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஈகுவடோரியல் கினியா ஆகிய நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய ஐந்து நாடுகளும் வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரம் கொண்டுள்ளன.

எனவே இவற்றில் ஏதேனும் ஒரு நாடு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும் குறித்த தீர்மானம் தோல்வியடையும்.
அதன்படியே, ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகள் எதிராக வாக்களித்ததால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை. ஐ.நா பாதுகாப்பு சபையில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த பிரித்தானியா-பிரான்ஸ்! தோல்வியடைந்த தீர்மானம் - Reviewed by Author on March 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.