அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இயற்கை வழியில் நெல் பயிர் செய்கை அறுவடை விழா சிறப்பாக நடைபெற்றது


மன்னாரில் இயற்கை வழியில் நெல் பயிர் செய்கை அறுவடை விழா எந்தவிதமான இராசாயனங்களும் பாவிக்கப்படாது இயற்கை வழியில் நெல் பயிர்செய்கைப் பண்ணப்பட்ட நெல் அறுவடை விழா மன்னார் அடம்பன் பண்ணையில் மன்னார் மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஆதரவில் நேற்று செவ்வாய் கிழமை (12.03.2019) நடைபெற்றது.இவ் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், மன்னார் மாவட்ட மற்றும் வட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கே.எம்.ஏ.சுக்கூர்,
அடம்பன் விவசாயப் பண்ணை உரிமையாளர் உருத்திரமூர்த்தி, இயற்கை வழி விவசாய அமைப்புக் குழுத் தலைவர் வைத்திய கலாநிதி என்.பிரபு உட்பட அதிகமான இயற்கை வழியில் நெல் பயிர் செய்கையில் ஆர்வம் கொண்டுள்ள ஆண் பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஒருவருடைய வாழ்க்கைத் தரம் வருமானத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. மாறாக உணவு என்ற விடயத்திலும் இது முக்கியமாக தங்கியுள்ளது. இந்த உணவானது ஆரோக்கிமானதாக அமைவதற்கு மன்னார் அடம்பன் பண்ணையில் எவ்வாறு இரசாயன பசளைகளை முற்றாக தவிர்த்து சேதன பசளை மூலம் உற்பத்தி செய்கின்றதோ ஒவ்வொருவிவசாயிகளும் இதை பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார்  தெரிவித்தார்.

எந்தவிதமான இராசாயனங்களும் பாவிக்கப்படாது இயற்கை வழியில் நெல் பயிர் செய்கைப் பண்ணப்பட்ட நெல் அறுவடை விழா மன்னார் அடம்பன் பண்ணையில் மன்னார் மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஆதரவில் நேற்று செவ்வாய் கிழமை (12.03.2019) நடைபெற்றது.

இவ் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், மன்னார் மாவட்ட மற்றும் வட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கே.எம்.ஏ.சுக்கூர், அடம்பன் விவசாயப் பண்ணை உரிமையாளர் உருத்திரமூர்த்தி, இயற்கை வழி விவசாய அமைப்புக் குழுத் தலைவர் வைத்திய கலாநிதி என்.பிரபு உட்பட அதிகமான இயற்கை
வழியில் நெல் பயிர் செய்கையில் ஆர்வம் கொண்டுள்ள ஆண் பெண் விவசாயிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த இயற்கை வழியில் நெல் பயிர் செய்கையின் அறுவடை விழாவானது மிக குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டபோதும் அதிகமான விவசாயிகள் இதில் கலந்து
கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்ல உணவை உண்ண வேண்டும் என நாம் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே இன்றைய உலகில் பலரும் எதிர்பார்ப்புடன் வாழ்கின்றனர்.

இந்த அடம்பன் பண்ணையானது ஒரு தனிப்பட்ட மனிதனான இவ் பண்ணையின் உரிமையாளர் உருத்திரமூர்த்தி எந்தவிதமான இரசாயனப் பசளைகளையும் பாவிக்காது நெற்செய்கை மற்றும் மரக்கறி செய்கையை நீண்ட காலமாக செயலப்படுத்தி வருகின்றார்.

இதற்காக நாம் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இவ் பண்ணை உரிமையாளர் தெரிவித்தார் இவ் செய்கையானது தங்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக கூறினார்.

இந்த பண்ணையில் எல்லா விதமான உற்பத்திகளையும் நாம் காண்கின்றோம். அவைகள் நெல்லாக இருக்கலாம் காய்கறிகளாக இருக்கலாம், கால் நடை, கோழி வளர்ப்பு ஆகியன இங்கு காணப்படுன்றன. இவைகள் எல்லாம் இயற்கை வளத்தைக் கொண்டே  உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஒருவருடைய வாழ்க்கைத் தரம் வருமானத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. மாறாக உணவு என்ற விடயத்திலும் இது முக்கியமாக தங்கியுள்ளது. மாதிரி பண்ணைக்கூடாக செயல் படுவதில் இரண்டு விடயங்கள் தங்கியிருக்கின்றன. நாம் தரமான உணவை பெற்றுக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் தரமான உணவை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மச்சம் அதாவது மீன் இறைச்சி இல்லாமல் பலருக்கு உண்ணும் உணவு இறங்காது என சொல்லுவார்கள். இவற்றைவிட மறக்கறி வகைகளில் அதிகமான தேக ஆரோக்கியத்துக்கான சத்துக்கள் காணப்படுவதால் நாம் இவற்றை இயற்கை வழியில் உற்பத்தி செய்து இவற்றை உண்ணுவதன் மூலம் எமது உடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து ஒரு பேராசிரியர் இங்கு வந்திருந்தார். தற்பொழுது
தங்கள் நாட்டில் பலர் மச்ச உணவுகளை தவிர்த்து  மறக்கறி வகைகள் கொண்டஉணவுகளையே விரும்பி உண்ணுவதாகத் தெரிவித்தார்.

ஆனால் ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை இந்தியா ஆகிய நாடுகளில் இறைச்சி சாப்பிடுவது அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடடிருந்தார் முன்னைய காலங்களில் எமது முன்னோர் பழைய சோற்றுக் கஞ்சியை அதிகமாக உண்டு ஆரோக்கியமாக காணப்பட்டனர். ஆகவே நாம் இயற்கை வழி விவசாயத்தை மேற்கொண்டு சரியான ஆரோக்கியமான உணவை உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்த பண்ணை மூலம் நாம் இயற்கை வழி மூலம்; பயிர் செய்கைப்பண்ணப்படுவதை பார்ப்பதும் மட்டுமல்ல நாமும் அதில் ஈடுபட்டு எமது உடல் ஆரோக்கயத்துக்கான உணவு பயிர் செய்கையில் ஈடுபட இவ் நிகழ்வு எமக்கு ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கின்றது.

இந்த பண்ணையை நாம் பார்க்கின்றோம் ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் கழிவுகளை சேதன பசளையாக மாற்றி பயிர்களை வளர்ப்பதையும் நாம் பார்க்கின்றோம். ஆகவே இது ஒரு ஒருங்கிணைப்பு பண்ணையாகவே நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

நமக்கு தெரியும் மன்னார் மழை வீழ்ச்சி குறைந்த  ஒரு வரண்ட பிரதேசம்
என்று. இவ் பண்ணையாளர் மழை நீரைக்கூட சேமித்து அதனை மிகவும்
பிரயோசனப்படுத்தி வருவதையும் இங்கு பார்க்கின்றோம்.
இன்று நாம் மாநிலங்கள், நாடுகள் போன்றவைகளை நோக்கும்போது தற்பொழுது பிரச்சனைகள் தண்ணீரால் தலைதூக்கி வருகின்றன.

ஆனால் இங்கு மழை நீரை சேகரித்து எவ்வாறு பயிர் செய்கையில் ஈடுபடுகின்றார் என்பது இது ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். ஆகவே நாம் ஒருங்கினைப்பு செய்பாட்டில் ஈடுபட்டு அது பண்ணையாக இருக்கலாம் அல்லது வீட்டுத் தோட்டமாக இருக்கலாம் நாம் எம்மை ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.








மன்னாரில் இயற்கை வழியில் நெல் பயிர் செய்கை அறுவடை விழா சிறப்பாக நடைபெற்றது Reviewed by Author on March 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.