அண்மைய செய்திகள்

recent
-

100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்த பிரித்தானியா -மறையாத ரத்தக்கறை!


இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற பிரித்தானிய ஆட்சியின் போது, ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த விடுதலை போராட்டத்தை தடுக்க 1919-ல் ரவுலட் சட்டம் அமலாக்கப்பட்டது.

இதை எதிர்க்கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கூடினர்.
அங்கு தன் படையுடன் வந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் 1600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். மறையாத ரத்தக்கறையாக இருக்கும் இந்த சம்பவம் பிரித்தானிய வரலாற்றில் அவமானமாக பார்க்கப்படுகிறது.

இந்த படுகொலை சம்பவத்திற்கு பிரித்தானியா மன்னிப்பு கேட்க வேண்டும் என சமீப காலமாக இந்தியா தரப்பில் இருந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மன்னிப்பு கேட்பது சரியாக இருக்காது என பிரித்தானிய அரசியல்வாதிகள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று கூடிய பிரித்தானிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார். ஆனால், முழுமையாக மன்னிப்பு கேட்கவில்லை.
இந்தப் படுகொலை சம்பவம் நடந்து வரும் ஏப்ரல் 13-ல் 100 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளன.

100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்த பிரித்தானியா -மறையாத ரத்தக்கறை! Reviewed by Author on April 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.