அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டில் 1,500 பேரின் உயிருக்கு அச்சுறுத்தலை உருவாக்கிய சுவிஸ் நிபுணர்:


தென் கொரியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு காரணம் சுவிட்சர்லாந்து நிபுணர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் குற்றச்சாட்டு முனவைத்துள்ளது.

தென் கொரியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி 5.4 என்ற ரிக்டல் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,500 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்ததாகவும், 67 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த நிலநடுக்கம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட செய்தி ஊடகப் பிரிவு ஒன்று, அந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என கண்டறிந்துள்ளது.
மேலும், அதன் காரணமானவர் சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் குடியிருந்துவரும் geothermal நிபுணர் Markus Häring எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

தென் கொரியாவின் Pohang பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, அப்பகுதியில் நடத்தப்பட்ட geothermal சோதனைகளின் தொடர்ச்சியே என சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று 2019 மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
geothermal நிபுணர் Markus Häring என்பவரை பொறுத்தமட்டில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸல் பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்திற்கு காரணமானவர் என ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.
3.4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது பாஸல் பிராந்திய மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்தது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற விசாரணையில் Häring குற்றமற்றவர் என 2009 ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது.
ஆனால், தென் கொரிய விவகாரத்தில் Häring குறிப்பிட்ட நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார் எனவும், அதற்கு ஊதியமாக சுமார் 190,000 பிராங்குகள் பெற்றுள்ளார் எனவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள Häring, தாம் தென் கொரிய நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் கொரிய நிபுணர்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டது காரணமாகவே, நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், பாஸல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையை விடவும் மூன்று மடங்கு பெரிய திட்டம் அது எனவும் சுவிட்சர்லாந்து நிறுவனம் பதிலளித்துள்ளது.
வெளிநாட்டில் 1,500 பேரின் உயிருக்கு அச்சுறுத்தலை உருவாக்கிய சுவிஸ் நிபுணர்: Reviewed by Author on April 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.