அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வெடிக்குண்டு சம்பவத்திற்க்கு காரணமான ஐ.எஸ் அமைப்பு.. இதுவரை நடத்தியுள்ள தாக்குதல்கள்..!


உலக நாடுகளையே அச்சுறுத்தும் ஐ.எஸ். எனப்படும் தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக், ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.

ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் கொள்கை.ஸூன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களான ஐ.எஸ். இயக்கம் ஈராக் படையினரை வெற்றிகொண்டு ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை முழுமையாகக் கைப்பற்றி அதனை இஸ்லாமிய கலீபா ஆட்சிக்குட்பட்ட ஒரு தனிநாடாக ஏனைய நாடுகளின் ஒப்புதலின்றி தாமாகவே அறிவித்திருந்தது. அத்துடன், தனது பெயரையும் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) எனவும் மாற்றியமைத்துக்கொண்டது. இதனையடுத்து, உலகம் முழுவதும் அதிகளவில் பேசப்படும் இயக்கமாக ஐ.எஸ். மாற்றமடைந்துவிட்டது.
இதுவரை ஐ.எஸ் அமைப்பு நடத்தியுள்ள தாக்குதல்கள்!
  • 2015ஆம் ஆண்டு ஏமன் நாட்டின் இரண்டு மசூதிகள் மீது ஐ.எஸ் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.
  • அதே ஆண்டு பிரான்ஸில், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் மீதும் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் பலியாகினர்.
  • இதை தொடர்ந்து, எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் 30 பேரை ஐ.எஸ்.படுகொலை செய்து தனது கொலை வெறியை உலகிற்கு காட்டியது. இதன் பின்னர், சிரியாவின் கோபென் நகர் மீதான ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 250 பேர் உயிரிழந்தனர்.
  • ரஷ்ய பயணிகள் விமானம் மீது ஐ.எஸ் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் 224 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 2016ஆம் ஆண்டு பெல்ஜியம் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் உயிரிழந்தனர்.
  • அதே ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 200 பேர் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
  •  
  •  
இலங்கை வெடிக்குண்டு சம்பவத்திற்க்கு காரணமான ஐ.எஸ் அமைப்பு.. இதுவரை நடத்தியுள்ள தாக்குதல்கள்..! Reviewed by Author on April 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.