அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை பகுதி காணிளை கையகப்படுத்தும் முயற்ச்சி தோல்வி


ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்குகிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில்
மன்னார் மாந்தை பிரதேச சபைக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்ததின் பின்னர்    இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பன்னை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம்  மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது அதே நேரம் எனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில்

 குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பல ஏக்கர்கள் பயிசெய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கஜூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம்  குறித்த காணிகளை பார்வையிடுவதற்காக இலங்கை கஜூ கூட்டுஸ்தாபன தவிசாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர் 

இந்த நிலையில்

குறித்த விஜயத்தின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலையிட்டு குறித்த 275 ஏக்கர் காணிகளும் மாந்தை பகுதியில் உள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் முன்னால் போராளிகளுக்கு வழங்குவதற்கேன பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பட்டியளும் தயாரிக்கப்பட்ட நிலையில் எந்த விதத்திலும் கஜூ கூட்டுத்தாபனத்திற்கு குறித்த காணிகளை வழங்கமுடியாது எனவும் கட்டாயத்தேவை இருப்பின் வனவள திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட 275 ஏக்கர் நிலத்திலும் கஜூ மரங்கள் காணப்படுவதால் அரச அனுமதிப்பெற்று அக்காணிகளை கஜூ  கூட்டு தாபனத்தின் கீழ் கொண்டுவருமாறு   கோரிக்கை விடுத்த நிலையில்

முரண்பாடு ஒன்று தோற்றம் பெற்ற நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகளை உடனடியாக பிரதேச செயளாலரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது
 அதே நேரத்தில் கஜூ கூட்டுத்தாபனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வெள்ளாங்குளம் பன்னை பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் காணிகளை பிரதேச செயலாளருடன் கலந்துறையாடி கஜூ கூட்டு தாபனத்திற்கு வழங்க அனுமதி பெற்று தர முயற்சி எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கபட்ட நிலையில்

குறித்த 275 ஏக்கர் பண்ணை நிலத்தையும் கையகப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டது

குறித்த சம்பவ இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மன்னார் நகரசபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடதக்கது.





மன்னார் மாந்தை பகுதி காணிளை கையகப்படுத்தும் முயற்ச்சி தோல்வி Reviewed by Author on April 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.