அண்மைய செய்திகள்

recent
-

தற்செயலாக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் கண்டுபிடிப்புகள் எவை தெரியுமா? -


விஞ்ஞானிகள் ஏதாவது ஒரு குறித்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே ஆராய்ச்சி செய்வதுண்டு.
அந்தவகையில் சில விஞ்ஞானிகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் இவ்வுலகில் பல உள்ளன. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
சாக்கரின்
1878ம் ஆண்டு Constantin Fahlberg எனும் ஆய்வாளர் தன் பரிசோதனைகளின் பின்னர் தற்செயலாக தன் விரல்களை சுவைத்தார்.
இதனால் சாக்கரின் ( Saccharin) எனப்படும் செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
பிளாஸ்டிக்
1907ம் ஆண்டில் Leo Baekeland எனப்படும் ஆய்வாளர் செயற்கை பிசினை உருவாக்க முயன்று அதற்கு பதில் தற்செயலாக கண்டுபிடித்ததே நெகிழி( (Plastic) எனப்படும் பிளாஸ்டிக்.
நுண்ணலை அடுப்பு
1945களில் ரோடார் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த Percy Spencer என்பவர் ஆய்வு நேரத்தில் தான் பையில் வைத்திருந்த சாக்லேட் உருகக் கண்டார். இதனாலேயே நுண்ணலை அடுப்பு (Micro Wave Oven) கண்டுபிடிக்கப்பட்டது.
நுண்ணுயிர் எதிர்ப்பி
இன்ஃபுளுவென்சா ( Influenza) வைரஸ்களை ஆய்வு செய்து கொண்டிருந்த Alexander Fleming 1928 களில் கண்டுபிடித்தது பெனிசிலின் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic ) தன் ஆய்வுகளின் போது தற்செயலாக மூடாமல் விட்ட ஓர் பாத்திரத்தில் பூஞ்சை பிடித்ததை அடிப்படையாகக் கொண்டே அவர் இதனை கண்டுபிடித்தார்.
தற்செயலாக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் கண்டுபிடிப்புகள் எவை தெரியுமா? - Reviewed by Author on April 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.