அண்மைய செய்திகள்

recent
-

யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம் பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம்

மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிரந்தரமுகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்  அது எங்களுக்கு விருப்பம் இல்லை எனவும் யுத்தகாலப்பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட முகாம்களிலும் ஆயிர்க்கணக்கானவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்கலாம் என  மன்னார் மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் சங்க தலைவி  மனுவல் உதயசந்திரா தெரிவித்துள்ளார்

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் கடற்படை மற்றும் இராணுவம் இன்னும் மக்களுடைய காணிகளிலும் அதே நேரத்தில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பாரிய முகம்களை தற்காலிகமாக அமைத்துள்ளனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல இராணுவ கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இந்த நிலையில் ஊடகங்கலுக்கு கருத்து தெரிவித்த மனுவல் உதயசந்திரா நாங்கள் காணமல் போன எங்களுடைய பிள்ளைகளை தேடி அழைகின்றோம் எங்கள் உறவுகள் எங்கு இருக்கின்றார்கள் அவர்கள் அந்த முகாம்களை நிரந்தரம் ஆக்கிவிட்டார்கள் என்றால் அவ் முகாம்களுக்குள் இருந்து எத்தனையோ ஆயிரம் எலும்புகூடுகள் வர போகின்றது அதனல் தான் அவர்கள் மறைமுகமாக அந்த காணிகளை தங்களே  கையால வேண்டும் என தெரிவிக்கின்றனர் எனவே ஒரு போது இந்த காணிகளை நிரந்தரமாக வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் வங்கியாக இருந்த பகுதியை இராணுவம் முகாம் ஆக்கி வைத்திருந்தது அதே போன்று சனிவிலச் கடற்படை முகாம் பள்ளிமுனை முகாம் அவற்றில் எல்லாம் எங்களுக்கு சந்தேகம் உள்ளது ஏன் என்றால் அவ் முகாம்களில் எல்லாம் யுத்தகாலத்தில் மக்களை கூட்டிச் சென்று விசாரித்த இடங்கள் அதுக்குள்ளும் நிறைய எலும்புக்கூடுகள் வரலாம் என சந்தேகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனால் அந்த காணிகளை கடற்படைகோ இராணுவத்திற்கோ எக்காரணம் கொண்டும் வழங்கவேண்டம் கொடுக்கு பட்சத்தில் அது அவர்களுக்கு நிரந்தரம் ஆகிவிடும் எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்காது எனவே பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம் பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் Reviewed by Author on April 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.