அண்மைய செய்திகள்

recent
-

ஆங்கில திரைப்படமாக உருவாக போகும் முள்ளிவாய்க்கால் அவலங்கள்! -


முள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகளை ஆங்கிலத்தில் முழுநீள படமாக்கி உண்மைளை திரைக்கு கொண்டுவருவேன் என்று ஆங்கில திரைப்பட இயக்குநர் கந்தசாமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் 12-04-2019 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது மூன்று தசாப்த காலம் கனடாவில் பல ஆங்கில திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளேன்.
நான் இயக்கிய Beneath the skin wintold story என்ற ஆங்கில படம் 3 விருதுகளை வென்றுள்ளது. அதாவது 2002 இல் நியூயோர்க் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது.


Divine dancers in heaver , Divine musical dancers, The Lunatic lover and a poet, Pearl in the Blood போன்ற திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளேன்.
குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட எனது திரைப்படத்துக்கு கூடிய செலவில் உருவாக்கப்படும் படங்களுடன் எனது படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு தரமான ஆங்கிலப் பட இயக்குநர் என்ற பெயரை பெற்றுள்ளேன்.
தரமான ஒளிப்பதிவாளர்களை யாழ்ப்பாணத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கும் தருவாயில் அல்லது சென்னையில் இருந்து ஒளிப்பதிவாளர்களை இங்கே கொண்டு வந்து தரமான முழுநீள திரைப்படத்தை எடுக்கவுள்ளேன்.
நான் பிறந்த மண்ணில் இடம்பெற்ற அநீதிகளை திரைப்படம் ஆக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன். அதற்கான 100 இற்கு மேற்பட்ட உண்மைக் கதைகளை வைத்திருக்கிறேன்.

எனது படங்கள் உண்மைகளை மட்டும் வெளிக்கொணரும் என்பது உண்மை.

ஆங்கில திரைப்படமாக உருவாக போகும் முள்ளிவாய்க்கால் அவலங்கள்! - Reviewed by Author on April 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.