அண்மைய செய்திகள்

recent
-

சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க -


சிரங்கு ஒரு சிறிய நுண்ணுயிரினால் ஏற்படும் ஒரு சாதாரணமான, அதிகளவில் தொற்றக்கூடிய தோல் நோய் ஆகும்.
சிரங்கு நோய் பெரும்பாலும், கைகளைக் கோர்த்தல் அல்லது கட்டிப்பிடித்தல் போன்ற, நேரடியான தோலுடன் தோல் தொடர்பின் மூலமாகப் பரவுகிறது.
இது துவாய்கள் அல்லது படுக்கைவிரிப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவும் பரவுகிறது.

அந்தவகையில் தற்போது சிரங்கு நோயால் அவதிப்படுபர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பின்பற்றினால் போதும். தற்போது இதனை பார்ப்போம்.
  • சிரங்கை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். இது தோலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
  • ஒரு டீஸ்பூன் சந்தனம் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்பூரம் இரண்டையும் சேர்த்த கலவையை சிரங்கு புண் இருக்கும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமடையும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை இழையும் சேர்த்து அரைத்து, அதை இந்த சிரங்கின் மேல் தடவி வர விரைவாக குணமடையும்.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த நீரால் அரிப்பெடுக்கும் இடத்தில், ஒத்தடம் கொடுத்தால் சற்று இதமாக இருக்கும்.
  • பாதாம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பிசைந்து, அதை சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர குணமடையும்.
  • ஒரு இரும்பு பாத்திரத்தில் 200 கிராம் கடுகு எண்ணெய் மற்றும் 50 கிராம் வேப்பிலையை சேர்த்து, அந்த இலை கருப்படையும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை குளிர வைத்து, தினமும் 4 முறை சிரங்கு புண்ணில் தடவ குணமடையும்.
  • பப்பாளி பழ விதையை நன்றாக பிசைந்து, அந்த விழுதை தடவ சிரங்கு புண்ணால் ஏற்படும் அரிப்பிற்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.
  • புதினா இலையை கையில் பிழிந்து அந்த சாறை தடவலாம்.
  • மூன்று கேரட் நன்றாக வேக வைத்து, அதை பிசைந்து 15 நிமிடம் வரை சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் துடைக்க வேண்டும்.
  • குளித்த பிறகு சிரங்கு புண் இருக்கும் இடத்தில் ஆலிவ் எண்ணெயை தடவ குணமடையும்.
  •  
சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க - Reviewed by Author on April 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.