அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கான விஜயம் திருப்தி! ஐநா குழு அறிவிப்பு -


இலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்திருந்த சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு அதன் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்திருக்கின்றது.

சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான தமது 10 நாள் பணிகளின் போது சகல தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் சென்று நிலைவரங்களைப் பார்வையிடக் கூடியதாக இருந்தது.
அத்துடன், பொருத்தமான சகல தகவல்களையும் பெற முடிந்ததுடன், நம்பகரமான நேர்காணலை செய்ய முடிந்ததாகவும் அந்த உபகுழு கூறியிருக்கின்றது.

இந்த விடயம் குறித்து அந்த குழுவின் தலைவர் விக்டர் சஹாரியா கருத்து தெரிவிக்கையில்,
“சித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் பிரகாரம் தேவைப்படுகின்ற தேசிய தடுப்புப் பொறிமுறை ஒன்றைப் பொறுத்தவரை இலங்கையின் நடவடிக்கைகளை நாம் சாதகமான முறையிலேயே நோக்குகின்றோம்.
தங்களது பணிகள் நம்பகத்தன்மை, பக்கச்சார்பின்மை, விருப்பத்தெரிவிற்கு அப்பாற்பட்ட தன்மை, முழுமையான உண்மை மற்றும் அக உணர்விற்கு அப்பாற்பட்ட அணுகுமுறை ஆகிய கோட்பாடுகளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டது.
ஐ.நா உபகுழுவினர் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு நிலையங்கள், மனநலக்காப்பகங்கள், சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்தனர்.

சித்திரவதைக்கு எதிரான சாசனத்தை கடந்த 2017ம் ஆண்டு இலங்கை ஏற்றுக்கொண்டது. அந்த சாசனத்தின் பிரகாரம் ஐ.நா உபகுழுவிற்கு எந்தவொரு நபரும் தகவல்கள் வழங்குவதைத் தடுப்பதற்கான அல்லது அனுமதிப்பதற்கான உரிமை எந்த அதிகாரிக்கும், எந்த அமைப்பிற்கும் கிடையாது.
அதனடிப்படையில் ஐ.நா உபகுழுவின் அடுத்த பணியாக அதன் அவதானங்கள், விதப்புரைகள் உள்ளடங்கிய நம்பகரமான அறிக்கையொன்று இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.
அந்த அறிக்கையை அரசாங்கத் தரப்பினர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதையும் இந்த உபகுழு ஊக்கப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.”
இலங்கைக்கான விஜயம் திருப்தி! ஐநா குழு அறிவிப்பு - Reviewed by Author on April 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.