அண்மைய செய்திகள்

recent
-

அன்றாட உணவில் இந்த ஒரு பொருளை ...பல நோய்களை விரட்டுமாம்! -


சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் அற்புத தாவரம் ஆகும்.
சோம்பு உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிக்கும் பணியுடன் சேர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் சேர்த்து செய்கின்றது.

இது பலவகை நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. இது அந்த காலத்திலிருந்தே மருத்துவ பயன்பட்டில் இருந்து வருகின்றது.
மேலும் இது சக்கரை வியாதி முதல் புற்றுநோய், கொழுப்புகளை கரைக்க இது பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது சோம்பு பயன்படுத்துவதனால் என்ன என்ன நோய்களை விரட்டலாம் என்று பார்ப்போம்.

  • சோம்பு செரிமான பாதையை சுறுசுறுப்படைய வெகுவாக உதவுகிறது. மேலும், அஜீரண வாயுவை கோளாறுகளை சரி செய்யவும், குழந்தைகள் மத்தியில் உண்டாகும் அஜீரணப் பிரச்சனைகளை தீர்க்கவும் சோம்பு உதவுகிறது.
  • அன்றாட உணவில் சோம்பை சிறிதளவு சேர்த்து உண்டு வந்தால் இரப்பை குறைபாடுகளில் இருந்து எளிதாக சீரான முறையில் தீர்வுக் காண முடியும்.
  • சோம்பின் இலை மற்றும் விதைகள் இரைப்பை சம்பந்தமான நோய், சுரம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். பச்சை இலைகளை வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க பயன்படுத்தலாம்.
  • சோம்பு மூளைக்கு சுறுசுறுப்பு அளிக்கவல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியம் அதிகரிக்கவும் வெகுவாக பலனளிக்கிறது.
  • சோம்பை நீரில் கலந்து அல்லது தேநீரில் கலந்து தினமும் குடித்து வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • சோம்பு இலையின் சாற்றை வெந்நீரில் கலந்து கண்ணை கழுவும் லோஷன் போன்று பயன்படுத்தலாம். ஆனால், அதிகளவில் பயன்படுத்தினால் இது பெண்களுக்கு மாதவிடாயை தூண்டிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • சோம்பிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வயிற்றில் இருக்கும் நச்சுக் கிருமிகளை ஒழிக்க உதவுகிறது.
  • சோம்பில் இருக்கும் மூலப் பொருட்களானது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வல்லது. இதனால் சீரான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.
  • சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, நீரில் சோம்பு கலந்த குடித்து வந்தால் உடம்பில் தேங்கியுள்ள ஊளைசதைதை குறைந்து உடல் மெலியலாம்.
  • நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த சோம்பு பயனளிக்கிறது.

அன்றாட உணவில் இந்த ஒரு பொருளை ...பல நோய்களை விரட்டுமாம்! - Reviewed by Author on April 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.