அண்மைய செய்திகள்

recent
-

23-05-2019 சர்வதேச கடல் ஆமைகள் தினம்.... சிறப்புக்கட்டுரை -அ. றொக்சன்

நமது பூகோள  அமைப்பில் பெரும்பகுதி நீரினால் சூழ்ந்து மூன்றில்  ஒரு பகுதியே நிலப்பரப்பாக  அமைந்துள்ளது நிலப்பரப்பில் காணப்படும் பல வகையான உயிரினங்களை பொதுமக்கள் தங்கள் வாழ்நாட்களில் பார்த்தும் அதன் பாதுகாப்பு  அவசியத்தை உணர்ந்து வருகின்றனர்.ஆனால் கடலில் காணப்படும் உயிரினங்கள் பற்றிய போதிய  விழிப்புணர்வு  இல்லை  என  உணரப்படுகின்றது.குறிப்பாக பருவநிலைமாற்றம் மனிதனது  பொறுப்பற்ற  செயற்பாடு  காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் முக்கியமாக கடல் ஆமைகள் அழிவடைந்து  வருகின்றது.வேகமாக  அழிவடைந்து  வரும் உயிரினங்களின் பட்டியலில் கடல் ஆமையும்  செந்தரவு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஆமைகளின்  புதைபடிவங்கள் 245 மில்லியன் ஆண்டுகளுக்கு  முன்னர் டிராசிக்  காலத்தை  சார்ந்தாக  காணப்படுகின்றது.கடல் ஆமைகள் 150 வருடம்  உயிர்வாழக்கூடியது.இதன் ஆயுள் அதிகமாக  இருப்பதற்கு இதன் இதயம் நிதானமாக  துடிப்பதே  காரணம்  என  சோல்லப்படுகின்றது.தற்போது 225 வகையான  ஆமை  இனங்கள் காணப்படுவதாக  சொல்லப்படுகின்றது.இலங்கையில்  குறிப்பாக  மன்னார் வளைகுடா,கற்பிட்டி  கடற்பரப்புக்களகல் 20 வகையான  கடல் ஆமைகள்  இருப்பதாக  சொல்லப்படுகின்றது.இதற்கு  காரணம் மன்னார்  வளைகுடா பிரதேசமானது அதிகளவான முருகைகற்பாறைகளையும் கண்டமேடைகளையும் கொண்டமைந்ததாக  இருக்கலாம்.

இதன் இனப்பெருக்கத்தை அவதானித்தால் முட்டை  இட்டு  குஞ்சு  பொரிக்கின்றது. இவை முட்டை இடுவதற்கு  பல்லாயிரம்  மைல்கள்  கடல் நீரோட்டத்தில்  பயணிக்கின்றன.பின்னர் இரவு வேளைகளில் இவை50-70  சென்ரிமீற்றர்  வரை  குளி தோண்டி (ஆமைக்கூடு) 100 தொடக்கம் 200 வரையிலான  முட்டைகளை  இடுகின்றன.ஆமைகள்  முட்டை  இடுவதற்கு  இரவு  நேரத்தை  தெரிவு செய்வதற்கான  காரணம் சந்திர  ஈர்ப்பு விசையால் அலைகள் மேல்நோக்கி  உயர்த்தப்படுவதால் இலகுவாக  கடற்கரையை  அடையலாம்  என்பதற்காக.இடப்பட்ட  முட்டைகளை  மண்ணால் மூடி  விட்டு  ஆமைகள்  சென்று  விடுகின்றன.இவை சூரிய  வெப்பதினால் இயற்கையாக  அடைகாக்கப்பட்டு 60 நாட்களில் குஞ்சுகளாக  வெளிவருகின்றன.இக் குஞ்சுகள்  தமது  ஆயுட்காலத்தில்  பலத்த  சவால்களுக்கு  முகம்  கொடுக்கின்றன.
1.பெரிய  மீன்களிடம்  இருந்து  தப்புதல்
2.பறவைகள்  விலங்குகளிடம்  இருந்து  தப்புதல்
3.சந்திர  ஒளியை  அடிப்படையாக  கொண்டு  கடற்கரையில் போரித்த  குஞ்சுகள் கடலை  அடைகின்றன.ஆனால் தற்போது  மனிதனது  செயற்பாடு  கடற்கரையில்  அமைக்கப்பட்டு  இருக்கும் சுற்றுலா  விடுதிகளில்  இருந்து  வரும் செயற்கை  ஒளி  மூலமாக  ஆமைக்குஞ்சுகளின் திசை  மாற்றப்பட்டு அழிவடைந்து  செல்கின்றது. இவை  முதிர்ச்சி  அடைய 30 ஆண்டுகள்  வரை செல்லும்..1000 குஞ்சுகளில்  ஒன்றே  முதிர்ச்சி  அடைகின்றது

இவற்றின்  உணவாக கடற்பாசிகள்.கடற்பஞ்சுகள்,மெல்லுடலிகள் ஜெல்லி  மீன்கள்  என்பன  காணப்படுகின்றன.

Google map.gps  காணப்படாத  காலங்களில்  ஆமைகளே  கடற்  பயணங்களுக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. ஒரு முறை  முட்டை  இட்ட  இடத்தையே  அடுத்த  முறையும் தெரிவு செய்து பல்லாயிரம்  கடல் மைல்  பயணம்  செய்து  அடைகின்றது  என்றால்  அவற்றின்  திறன்  எவ்வாறு  காணப்படுகின்றது  என்பது  பற்றி  சிந்திக்க  வேண்டும்.

இன்று  இவ்  ஆமை  இனமானது  வேகமாக  அழிவடைந்து  வருகின்றது.மனிதனது  பொறுப்பற்ற  செயற்பாடுகள் இதற்கு  காரணமாக  அமைகின்றது.குறிப்பாக  இலங்கையை  பொறுத்தமட்டில் கடல்  ஆமைகள்  பிடித்தல்  தடைசெய்யப்பட்ட ஒன்றாகவும் தண்டனைக்கு  உரிய  ஒன்றாகவும்  காணப்படுகின்றது.மேலும் mas நிறுவனமானது 2019 கிரிக்கட்  உலக  கிண்ண   இலங்கை  சீருடையை  கடற்கரையில் இருந்து  கடற்படை  மூலமாக அகற்றப்பட்ட  பிளாஸ்டிக்  கழிவுகளில் இருந்து  வடிவமைக்க்பட்டு சீருடையில் கடலாமையின்  படத்தினை  இட்டமையானது மக்கள் மத்தியில்  ஒரு  விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பதை ஒட்டி  இது  எல்லோராலும்  பாராட்டப்பட  வேண்டிய  ஒன்னாகும்.
 கடல்  ஆமைகளை  பாதுகாக்கும் செய்முறைகள்
1.கடல் சட்டங்களை  கடுமையாக்கல்
2.இழுவை வலை. தங்கூசி  வலை பாவனைகளை  முற்றாக  தடுத்தல்
3.டைனமெற் பாவனையை  தடுத்தல்
4.பிளாஸ்டிக்  கழிவுகளில்  இருந்து  கடற்  சூழலை  பாதுகாத்தல்
5.மீனவர்களுக்கு  விழிப்புணவை  ஏற்படுத்தல்.
6தொடற்சியாக  இனம்  பெருகும் கடற்கரைகளை  பாதுகாத்தல்.

இவ்வாறாக  எமது  பூமி  தாயை பாதுகாத்து எமது  எதிர்கால  சந்ததி  இயற்கையை ரசிப்பதற்கு  உதவுவோம்

அ.றொக்சன் சைலேந்திரா
புவியியல் துறை
யாழ் பல்கலைக்கழகம்.



23-05-2019 சர்வதேச கடல் ஆமைகள் தினம்.... சிறப்புக்கட்டுரை -அ. றொக்சன் Reviewed by Author on May 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.