அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாதுகாப்பற்ற தேவாலயங்கள் தவிர கடந்த ஞாயிறு முதல் வழிபாடுகள் நடைபெறுகின்றன-குருமுதல்வர் அருட்பணி.A.விக்ரர் சோசை அடிகளார்.

மன்னார் மறைமாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சில ஆலயங்களில் பாதுகாப்பு இன்மையின் காரணமாக அவ் ஆலயங்கள் தவிர்ந்த ஏனைய முக்கிய ஆலயங்களில் கடந்த ஞாயிறு முதல் பாதுகாப்பு படையினரின் ஆலோசனைக்கமைவாக பலத்த பாதுகாப்புடன் வழிபாடுகள் நடைபெற்று வருவதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி.ஏ.விக்ரர் சோசை அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் நிலவி வருழ் அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்பு சம்பந்தமாக உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட செயலகத்த்pல் நேற்று வியாழக் கிழமை (02.05.2019) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு முப்படைகளின் மன்னார் மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும்
மதத்தலைவர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி.ஏ.விக்ரர் சோசை அடிகளார் தொடர்ந்து உரையாற்றுகையில்

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் எவ்வித ஆபத்துக்களும்  ஏற்படா வண்ணம் இங்குள்ள முப்படைகளும் தகுந்த பாதுகாப்புக்களை வழங்கி வருவதையிட்டு நன்றி தெரிவித்து நிற்கின்றோம்.
தற்பொழுது கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் பாதகாப்பு படையினரின்
வழிகாட்டலின் கீழ் அதிகமான தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெற்று
வருகின்றன. பாதுகாப்பு இன்மையால் சில தேவாலயங்கள் இனம் காணப்பட்டுள்ளதால் அங்கு இன்னும் வழிபாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை.

கத்தோலிக்க தேவாலயங்களைப் பொறுத்தமட்டில் பக்தர்கள் வழிபாட்டுகளுக்கு மாத்திரமல்ல பத்தர்கள் பெருமபாலானோர் தங்கள் வேலைத் தளங்களுக்கு செல்லும் முன்போ அல்லது சென்று வந்த பின்போ அத்துடன் தங்கள் ஓய்வு நேரங்களில் ஆலயம் சென்று செபிப்பது வழமையாகும்.

இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பு முறைகள் எமக்கு திருப்திகரமாக
இருக்கின்றன. என்றாலும் பாதுகாப்பு படையினர் மக்களின் ஆன்மீகத்
தேவைகளையும் சற்று கவனத்தில் கொண்டு அதற்கேற்றமாதிரி பாதகாப்புக்கு
பங்கம் விளைவிக்காத தன்மையில் பாதகாப்பு தரப்பினர் பக்தர்கள் மத்தியில்
செயல்பட்டால்  நலமாக இருக்கும் என நினைக்கின்றோம் என்றார்.

மன்னாரில் பாதுகாப்பற்ற தேவாலயங்கள் தவிர கடந்த ஞாயிறு முதல் வழிபாடுகள் நடைபெறுகின்றன-குருமுதல்வர் அருட்பணி.A.விக்ரர் சோசை அடிகளார். Reviewed by Author on May 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.