அண்மைய செய்திகள்

recent
-

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை: சென்னை தோல்வி -


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

டூ பிளஸ்சிஸ் 6(11) ஓட்டங்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 5(7), ஷேன் வாட்சன் 10(13), ஓரளவு நிலைத்து நின்று ஆடிய முரளி விஜய் 26(26) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து அம்பத்தி ராயுடு, அணித்தலைவர் டோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது.
மும்பை அணி, தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் சென்னை அணியின் ரன் ரேட் உயர்வதை கட்டுப்படுத்தினர்.
இறுதியில் டோனி 37(29) ஓட்டங்களும், ராயுடு 42(37) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜெயந்த் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் அணித்தலைவர் ரோகித் சர்மா, குயிண்டன் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அதில் ரோகித் சர்மா 4(2), டி காக் 8(12) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அடுத்ததாக சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் சூர்ய குமார் யாதவ் 37 பந்துகளில் தனது அரைசதத்தினை பதிவு செய்தார். அடுத்ததாக இஷான் கிஷான் 28(31) ஓட்டங்களில் போல்ட் ஆகி வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய குர்ணால் பாண்ட்யா (0) ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சிறப்பாக ஆடிய சூர்ய குமார் யாதவ் 71(54) ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 13(11) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் மும்பை அணி 18.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த சென்னை அணி, நாளை நடைபெற உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோத உள்ளது.



இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை: சென்னை தோல்வி - Reviewed by Author on May 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.