அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கிழக்கு ஆளுனர் கிஸ்புல்லாவால் தமிழ் மக்களின் 508 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு தனியார் நிறுவனம் ஒன்றின் பெயரில் கொள்வனவு -சாள்ஸ் நிர்மலனாதன் நேரடி விஜயம்

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புள்ளாவுக்கு சொந்தமான SEYLAN
Business private limited  நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது

இவ் காணிகள் தொடர்பாகவும் இவ் காணிகள் கொள்வனவு தொடர்பாகவும் பெரும் சந்தேகம் இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார்

இன்றைய தினம் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல் வாதிகள் பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தில்   யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த மக்கள் காணிகளில் இல்லாமை காரணமாக அவர்களுடைய காணிகளையும் அடாத்தாக கொள்வனவு செய்து இங்குள்ள முஸ்லீம் நபர்களுடைய பெயர்களில் பெயர் மாற்றம் செய்து பல இடங்களில் பல ஏக்கர் காணிகளை முஸ்லீம் அரசியல் வாதிகள் கொள்வனவு செய்திருக்கின்றனர்   

குறிப்பாக தற்போது கிழக்கில் ஆளுனராக உள்ள கிஸ்புல்லா அவர்கள் மன்னார் ஓலைதொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை செலான் பிஸ்னஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் அந்த நிருவனத்தின் இயக்குனராக கிஸ்புள்ளா இருக்கின்றார் அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை  2013 ஆம் ஆண்டு  கொள்வனவு செய்து இருக்கின்றார்

இந்த 508 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு நிதி எவ்வாறு கிடைத்தது குறித்த அரசியல் வாதிக்கு எந்த அரபு நாட்டில் இருந்து எந்த செல்வந்தர் நிதி வழங்கினார் என்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் தெரிவித்ததுடன்

 இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைகழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது அதற்கு சவுதியை சேர்ந்த தனிப்பட்ட நபர் ஒருவர் கிஸ்புல்லவிற்க்கும் அவருடைய மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகையான பணம் அனுப்பியிருக்கின்றார் அதன் மூலம் பல்கலைகழகம் கட்டப்பட்டுள்ளது

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லீம் மத தீவிரவாத அமைப்புக்களால் கத்தோலிக்க மக்களை குறிப்பாக இலக்கு வைத்து  தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது

இந்த உவரிப்பகுதியும் ஒரு கத்தோலிக்க கிராமமாகும் இங்கிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் இருக்கின்றார்கள்  ஆரம்பத்தில் இது ஒரு தமிழ் மக்களுடைய கிராமம் அதற்கு அடையாலமாக 500 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட அந்தோனியார் ஆலயம் இங்கு இருக்கின்றது

ஆக இப்படியான நில ஆக்கிரமிப்புக்களை முஸ்லீம் அரசியல் வாதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துகொண்டு தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து அரபு நாடுகளில் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதிகளை பெற்று தாங்களும் அந்த பணத்தில் சுக போகத்தை பெற்று இங்குள்ள தமிழ் மக்களி காணிகளை எந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றார்கள்

குறிப்பாக இந்த உவரி பகுதிகாணி தற்போது கிழக்கு ஆளுனர் எந்த அடிபடையில் 508 ஏக்கர் கொள்வனவு செய்தார் அவருடைய உள்நோக்கம் என்ன  என்பது தொடர்பாக தேசிய புலனாய்வு உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதுடன் அதற்குறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

 இந்த செலான் நிறுவனத்திறுக்கு எவ்வாறு இவ்வளவு பணம் கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரித்து இந்த காணிகளை அரச உடைமையாக்கி இவ் பிரதேசங்களில் காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தலிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்

அதே நேரத்தில் 508 ஏக்கர் காணிகள் என்ற போர்வையில் குறித்த பகுதியில் உள்ள 900 ஏக்கர் காணிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் எனவே உடனடியாக இது தொடர்பான விசாரணகளை முன்னேடுத்து உண்மை நிலையை வெளிக்கொண்டுவறுமாரும் தெரிவித்துள்ளார்

குறித்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட நகர சபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் அவ் காணிகளை பார்வையிட்டமை குறிப்பிடதக்கது.













மன்னாரில் கிழக்கு ஆளுனர் கிஸ்புல்லாவால் தமிழ் மக்களின் 508 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு தனியார் நிறுவனம் ஒன்றின் பெயரில் கொள்வனவு -சாள்ஸ் நிர்மலனாதன் நேரடி விஜயம் Reviewed by Author on May 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.