அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையில்-உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

இஸ்லாம் மதத்தைச் சொல்லி உயிர்த்த ஞாயிறு அன்று கொடூரமான செயல்களை புரிந்தவர்களுக்கும் அவர்களைச் சார்ந்து இவ் செயல்பாட்டில்
ஈடுபட்டவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதில்
ஈடுபட்டவர்களை இஸ்லாம் சமூகம் இனம் காட்டி வருகின்றது. இறந்தவர்களுக்கு எமது சபையின் சார்பாக எமது அஞ்சலியையும் செலுத்தகின்றோம் என மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐhஹீர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று செவ்வாய் கிழமை  14.05.2019 மன்னார் பிரதேச சபையின் 14வது
மாதாந்த அமர்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வின்போது மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்கள் உட்பட
மன்னார் பிரதேச சபையின் ஊழியர்களும் கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மெழுகுத்திரி கொழுத்தி அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற  இவ் நிகழ்வின்போது மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐhஹீர் தொடர்ந்து உரையாற்றுகையில்

கடந்த உயிர்த்த ஞாயிறு தினம் நடைபெற்ற கொடூரமான செயலின்போது
இறந்தவர்களின் ஆன்மா சாந்திபெற வேண்டும். அத்துடன் இவ் செயலில்
காயமுற்றவர்கள் விரைவில் சுகமடைந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.

இந்த கொடூர செயல்களுக்கு யார் யார் எல்லாம்
சம்பந்தப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள் மிகவும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த செயல்பாட்டினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்களுடைய இஸ்லாமானது இப்படிப்பட்ட கொலை செய்ய வேண்டும் என
போதிக்கவில்லை. எங்கள் மார்க்கம் ஒரு புனிதமான மார்க்கம். இஸ்லாம்
மார்க்கத்தை யாரும் விமர்சித்தாலும்கூட சார்ந்து செல்லுங்கள் என கூறும்
ஒரு மார்க்கம்.

உயிரை எடுக்க வேண்டும் என கூறும் மார்க்கம் அல்ல இஸ்லாம் மார்க்கம்.
இப்படியான கொடூரமான செயலைச் செய்தவர்கள் யாராக இரந்தாலும் அவர்களை உச்சத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்றே வேண்டி நிற்கின்றோம்.

இப்படிப்பட்டவர்களை சம்மாந்துரை எமது இஸ்லாம் மக்கள் அவர்களை காட்டிக் கொடுத்து வருகின்றார்கள். இந்த நாட்டில் 22 இலட்சம் முஸ்லீம் மக்கள் இருக்கின்றார்கள். இதில் 50, 100  பேர் இஸ்லாத்தின் பெயரால் செய்த
வேலையால் நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய மக்கள் தீய சக்தியாக ஒரு
பயங்கரவாதியாக சித்தரிக்கப்ட்டு வருகின்றார்கள் செய்தவர்களை விடுத்து எல்லோரையும் அவர்களைப்போல் பயங்கரவாதிகள் என
சித்தரிப்பதை கைவிடும்படி வேண்டுகின்றோம். இவ்வாறான கொடூரமான செயல்பாட்டில் இறங்கியவர்கள் நாசமாக போக வேண்டும் என நாங்கள் எங்கள் றம்ழான் மாதத்தில் ஒவ்வொருவரும் துவா வேண்டி நிற்கின்றோம்.

றம்ழான் மாதத்தில் எங்கள் துவாக்கள் நேரடியாக இறைவனிடம் ஏற்றுக்
கொள்ள்பபடும். இன்று நாங்கள் இந்த றம்ழான் மாதத்தில் நாங்கள் எங்கள் மத
வழிபாடுகளை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

கடந்த காலத்தில் நமது தமிழ் மக்கள் எவ்வாறு துன்பங்களுக்கும்
கஷ;டங்களுக்கும் உள்ளாகினார்களோ அதைவிட இஸ்லாமிய மக்கள் பல
துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.






மன்னார் பிரதேச சபையில்-உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி Reviewed by Author on May 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.