அண்மைய செய்திகள்

recent
-

இடுப்புச் சதையை குறைக்க இதோ எளிய பயிற்சி! -


இன்றைய கால பெண்கள் பெரிதும் இடுப்பு சதையினை குறைக்க பெரும்பாடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
இதற்கு ஜிம்மிற்கு தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு வீட்டிலேயே சிறிய உடற்பயிற்சிப் பொருட்களைப் பயன்படுத்தி, 15 நிமிடம் வொர்க்அவுட் செய்தால் போதும். எளிதில் ஃபிட்டாகலாம் என சொல்லப்படுகின்றது.

தற்போது இந்த உடற்பயிற்சியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கிராஸ் கிரெஞ்ச் (Cross crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும். வலது கையை காதின் அருகே வைத்தபடி இடது காலை மடக்கி இடுப்பு உயரத்துக்குத் தூக்க வேண்டும்.
முதுகு வளையக் கூடாது. பழைய நிலைக்குத் திரும்பி இதே போன்று இடது புறமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
பின் முதுகுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். தசைகளை உறுதிப்படுத்தும். கீழே படுத்து செய்யும் பயிற்சிகளைவிட இந்தப் பயிற்சியால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்டாண்டிங் ட்விஸ்டர் (Standing twister)
மெசின் பாலை, கையில் பிடித்தவாறு, கால்களை சற்று அகட்டி நிற்க வேண்டும். கைகளை உடலுக்கு முன் நீட்ட வேண்டும்.
பின் உடலைத் திருப்பாமல், வளைக்காமல் கைகளை இடது புறம் திருப்ப வேண்டும். பழைய நிலைக்கு வந்து அதேபோல் வலது புறம் நீட்ட வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
வெளி மற்றும் உள் ஆப்ளிக்ஸ் தசைகளை மெலியச் செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்.
சைடு கிரெஞ்ச் (Side crunch)
கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும்.வலது கையை மடக்கி, காதின் அருகே வைக்க வேண்டும். இடது கை உடலோடு ஒட்டி இருக்கட்டும்.
இப்போது, உடலை வலது புறம் வளைத்து, பழைய நிலைக்குத் திரும்பி, வலது புறம் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
வயிற்றின் பக்கவாட்டில் உள்ள எக்ஸ்டர்னல் ஆப்ளிக்ஸ், இன்டர்னல் ஆப்ளிக்ஸ், வயிற்றுத் தசைகளுக்கு நல்ல பயிற்சி.

இடுப்புச் சதையை குறைக்க இதோ எளிய பயிற்சி! - Reviewed by Author on June 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.