அண்மைய செய்திகள்

recent
-

முதன்முறையாக ஜேர்மன் நகரம் ஒன்றிற்கு ஜேர்மானியரல்லாத மேயர் தேர்வு!


முதல் முறையாக ஜேர்மன் நகரம் ஒன்றிற்கு ஜேர்மானியர் அல்லாத ஒருவரை மக்கள் மேயராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
டென்மார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான Claus Ruhe Madsen என்பவர்தான், Rostock நகரத்தின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளவராவார்.
சுயேட்சையாக போட்டியிட்ட Madsen, தன்னை அடுத்து வந்துள்ள Steffen Bockhahnஐவிட 10 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Madsenக்கு 57 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், Steffen Bockhahnக்கு சுமார் 43 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.

டென்மார்க்கின் தலைநகரான Copenhagenஇல் பிறந்த Madsen (46), 1992 முதல் ஜேர்மனியில் வாழ்ந்து வருவதோடு, 20 ஆண்டுகளுக்கு முன்பு Rostockஇல் குடியமர்ந்தார்.
என்றாலும் அவருக்கு ஜேர்மன் பாஸ்போர்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பிரச்சாரத்தின்போது, Rostock நகரம் கடந்த காலத்திலேயே சிக்கிக் கொண்டுள்ளது என்று கூறியிருந்த Madsen, நகரத்தை நாகரீகமாக்குதல் என்னும் கருத்தையே முக்கிய வாக்குறுதியாக முன்வைத்திருந்தார்.
டென்மார்க் மற்றும் ஸ்வீடன் உட்பட Baltic கடலைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளிலுள்ள நிறுவனங்களை கவர்ந்திழுக்கும் வகையில் நகரத்தை மாற்ற இருப்பதாக அவர் வாக்களித்திருந்தார்.
அதேபோல் Rostockஇல் ஒரு புதிய தியேட்டரை கட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஐந்து மரச்சாமான்கள் கடைகளை நடத்தி வரும் Madsen, தான் மேயராக தேர்வு செய்யப்பட்டால், கடைகளை நிர்வகிக்கும் பொறுப்பை தனது மனைவியிடம் ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
முதன்முறையாக ஜேர்மன் நகரம் ஒன்றிற்கு ஜேர்மானியரல்லாத மேயர் தேர்வு! Reviewed by Author on June 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.