அண்மைய செய்திகள்

recent
-

தினமும் பால் குடிப்பதனால் பெருங்குடல் புற்றுநோய் வீரியம் குறையுமா? -


பெருங்குடலின் உட்புறத்தில் தோன்றும் கேன்சர், பெருங்குடல் முழுவதுமாக பரவி, மலக்குடல் வரை தன் தாக்குதலைத் தொடுக்கும் பெருநோய் தான் பெருங்குடல் புற்றுநோய் எனப்படுகின்றது.
பெருங்குடல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் புற்று நோயை எளிதில் தடுக்கலாம்.
அதில் கால்சியம் அதிகமான பால் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயை தவிர்த்து விடலாம் எனப்படுகின்றது.
அதிலும் பால் பொருட்கள் குடல் புற்றுநோயை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஒரு நாளைக்கு 4 டம்ளர் பால் குடிக்கலாம். இதனுடன் விட்டமின் டி சத்தை சேர்த்து எடுக்கும் போது குடல் புற்றுநோயை எளிதாக தவிர்க்கலாம் என கூறப்படுகின்றது.
மேலும் பால் பொருட்களை எடுத்து வரும் போது 50-60 % குடல் புற்று நோயை நம்மால் குறைக்க முடியும்.
அதுமட்டுமின்றி பால் பொருட்களால் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, தசைகளின் கட்டமைப்பு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இதனை பெரியவர்கள் 1000-1200 மில்லி கிராம் கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 3-4 டம்ளர் பால் குடிக்கலாம். யோகார்ட், சீஸ், பால் பொருட்கள் போன்றவற்றையும் பாலுடன் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம். இது நமது உடலையும் குடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மேலும் கால்சியம் பெருங்குடல் புற்றுநோய்க்கு மட்டுமல்லாது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

தினமும் பால் குடிப்பதனால் பெருங்குடல் புற்றுநோய் வீரியம் குறையுமா? - Reviewed by Author on June 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.