அண்மைய செய்திகள்

recent
-

மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இருக்க வேண்டுமா? -


வயது அதிகரிக்க அதிகரிக்க நாம் பல நோய்கள் தோடி வந்துவிடுகின்றது.
இதில் ஒன்று தான் தசைநார்கள் கிழியும் பிரச்சினை. வயது அதிகரிக்கும் போது தசைநார்களின் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். இதனால் நடக்கவோ, ஓடவோ, பளுவான பொருட்களைத் தூக்கவோ முடியாது. கடுமையான வலியை உணரக்கூடும்.

இதனால் நாளுக்கு நாள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதற்கு இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பானத்தினை குடித்தாலே போதும். தற்போது அதனை பார்ப்போம்.
தேவையானவை
  • பட்டைத்தூள் - 5 கிராம்
  • அன்னாசி பழச்சாறு
  • ஓட்ஸ் - ஒரு கப்
  • ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்
  • பாதாம் - 20 கிராம்
  • தேன் - 20 கிராம்
தயாரிக்கும் முறை
ஒரு டம்ளரில் நீர் மற்றும் 5 கிராம் பட்டைத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அன்னாசி பழச்சாற்றினை சிறிது எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கப் ஓட்ஸ் மற்றும் 1 கப் ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொள்ளவும்.
20 கிராம் பாதாம் மற்றும் 20 கிராம் தேன் எடுத்துக் கொள்ளவும். ஓட்ஸை பால் சேர்த்து வேக வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஆரஞ்சு ஜூஸ், தேன், பாதாம் மற்றும் பட்டை ஆகியவற்றை பிளண்டரில் போட்டு ஒருமுறை அடித்து, ஓட்ஸ் உடன் சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு ஓட்ஸ் கலவையை பிளண்டரில் போட்டு, அத்துடன் அன்னாசி பழச்சாற்றினை சேர்த்து நன்கு அரைத்து, பின் பருகவும்
இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணரலாம்.
குறிப்பாக இந்த பானத்தைப் பருகும் போது, தசைநார்களுக்கு வலிமையளிக்கும் உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால், இன்னும் நல்லது.
மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இருக்க வேண்டுமா? - Reviewed by Author on June 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.