அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான பொப்பிசைப்பாடல் அழிந்து கொண்டு செல்கின்றது-சவிரியான் பற்றிக் லெம்பேட்


கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் பகுதியில் ஓய்வு நிலை கிராமசேவகரும் நாடக நெறியாளரும் மறை சமூகபணியாளருமாகிய செழுங்கலைவித்தகர் சவிரியான் பற்றிக் லெம்பேட் அவர்களின் அகத்திலிருந்து….


தங்களைப்பற்றி-
நான்  அழகிய அழகிய  வங்காலை-01 மன்னாரில் குடும்பத்தினருடன் சந்தோசமாக கலைச்சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

தங்களது கல்விக்காலம் பற்றி-
அது ஒரு அருமையான காலம் தான் 01-க.பொ.த உயர்தரம் வரை மன்.புனித ஆனாள் வித்தியாலயத்திலும் கற்றதோடு மேலதிக பயிற்சிகளாக
யாழ் கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரியில் தமிழ் சுருக்கெழுத்து தட்டெழுத்து ஒருவருட பயிற்சி நெறியினை சித்தியடைந்துள்ளேன்.
கிளிநொச்சி விவசாய பாடசாலையில் ஒரு வருட பயிற்சி நெறி சித்தியடைந்துள்ளேன்.
வவுனியாவில் 2வருட விவசாய டிப்ளோமா நெறியினை பெற்றுக்கொண்டேன்.

தங்கள் பணியின் தன்மை பற்றி---
எனது பணியானது மக்கள் பணியாக கிராமசேவகராக இருந்து பல சமூகப்பணியாகவே அமைந்தது சுமார் 33வருடங்கள் அரச சேவையில் கடமையாற்றி 2014ம் ஆணடு ஓய்வு பெற்றிருக்கின்றேன்.

தங்களால் நெறியாள்கை செய்த நாடகங்கள் பற்றி…
  • தீவிரவாதி
  • சாட்சிகள்
  • முத்துச்சிப்பி
  • தானியேல்
  • சங்காரம்
  • நிஜங்கள்
  • வீரம் விளைந்த மண்
  • யோசப்வாஸ் ஆகிய குறுநாடகங்களும்
  • திரௌபதியின் திருமணம்
  • விசுவாசத்தின் தந்தை
  • அபிமன்யு வதை
  • இந்திரஜித்
  • ஏகலைவன் ஆகிய நாட்டுக்கூத்துகளும்
  • பேராசை
  • மீண்டும் நகைச்சுவை நாடகங்களும் நான் எழுதி நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளேன்  அத்துடன் சில நாடகங்களில் நடித்தும் உள்ளேன்.

தங்களது கலையார்வச்செயற்பாடுகள் பற்றி…
  • கவி வாழ்த்துப்பாக்கள் 50மேலும்;
  • கண்ணீர் அஞ்சலிப்பாக்கள் 50மேலும் எழுதிக்கொடுத்துள்ளேன்.
  • 2014ம் ஆண்டு கல்வாரியில் காவியம் திருப்பாடுகளின் காட்சி நாடகம் 06மணிநேரம் கொண்ட காட்சி நிகழ்வை எழுதி மேடையேற்றினேன். திருவாளர் வின்சன்ட் லெம்பேட் அவர்களுடன் இணைந்து இத்திருப்பாடகளின் காட்சியை நெறியாள்கை செய்துள்ளேன்.
  • காலம் சென்ற கலாபூஷணம் பி.சவிரியான லெம்பேட் அவர்களின் "நீரோவின் கொடுமை" "நல்ல தீர்ப்பு" நாடகங்களிலும் திருவாளர் சீ.பத்திநாதன் பறுனாந்து அவர்களின் "கள்வர் நடுவே கடவுள்" எனும் திருப்பாடுகளின் காட்சியிலும் பிரதான பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளேன்.
  • அத்துடன் எமது கிராமத்தின் சிறப்பு கூத்து நாடகமாகிய மரியசித்தாள் வாசாப்பு எனும் பெரிய நாடகத்தை 2012ம் அண்ட திருவாளர் எல்.வின்சன்ட் லெம்பேட் அவர்களுடன் இணைந்து நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளேன்.
அத்துடன் தமிழ்தினப்போட்களுக்கு நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் போன்றவற்றை எழுதி நெறியாள்கை செய்தும் போட்டிகளில் நடுவராக கடமையாற்றியும் வருகின்றேன். நான் நானாட்டான் பிரிவில் கிராம சேவகராக கடமையாற்றிய போதும் பிரதேச கலை விழாக்கள் வாணி விழாக்கள்-கிறிஸ்மஸ் நிகழ்வுகள் போன்றவற்றில் கவியரங்குகள் வில்லுப்பாட்டுக்கள்-நகைச்சுவை நாடகங்டகள் ஆகியவற்றினை வழங்கியும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் போன்ற கலைப்பணியில் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன்.

கலைஞர்களுக்குரிய கௌரவம் உரிய முறைப்படி வழங்கப்படுவதில்லை என்ற கருத்துக்கள் பற்றி…
இக்கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் கலைஞர்கள் கௌரவத்தில் நேர்மைதன்மை இருக்கின்றதா... என்றால் அது கேள்விக்குறியாகத்தான்? உள்ளது. கண்டுபிடிக்கவும் முடியாது?ஏன் என்றால் ஓட்டப்போட்டி என்றால் முதலாமிடம் வருபவரை வடிவாக தெரியும் இது கலைத்துறை எழுத்துப்போட்டிகள் அப்படியல்லவே…
வடமாகாண  கலாச்சார பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் 05ம் இடம் வந்தேன் சந்தோசம் தான் இருந்தாலும் ஏன் எனக்கு முதலிடம் கிடைக்கவில்லை கவிதை நாடகம் நாட்டுக்கூத்து போன்ற போட்டிகளில் பல முறை கலந்துள்ளேன். ஆனாலும் 2ம் 3ம் இடங்களைத்தான் பெறமுடிந்ததே தவிர 1ம் இடங்களைப்பெறமுடியவில்லை இதற்கு முழுமையான காரியம் எனக்கு தெரியவில்லை…பிரதேசவாதமா…? செல்வாக்கா…? புரியவில்லை ஆனாலும் நான் என்னைப்போன்றோர்கள் கலையார்வத்தினால் இன்னும் போட்டிகளில் பங்குபற்றுகின்றார்கள் எல்லாம் கலையின் மீதுள்ள காதலே…

தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி---
  • 2017ம் ஆண்டு நானாட்டான் கலாச்சாரப்பேரவையினால் செழுங்கலை வித்தகர் விருதும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
  • வங்காலை புனித அந்தோனியார் மீனவர் கூட்டுறுவுச்சங்கத்தின் 25 ஆண்டு யூபிலி நினைவுச்சின்னம்-29-09-2014
  • தமிழ் இலக்கியமன்றம்-மொறட்டுவ பல்கலைக்கழகம் சொற்கணை நினைவுச்சின்னம்-2017
  • நானாட்டான் பிரதேச சபைக்கீதம் எழுதியுள்ளேன் அதற்கு பாராட்டும்பெற்றுள்ளேன்.
  • 2018ம் ஆண்டு வடக்கு கலாச்சார அமைச்சினால் நடாத்தப்பட்ட கவிதையாக்கப்போட்டியில் 5ம் இடம்பெற்றுக்கொண்டேன். இன்னும்…

தாங்கள் பணியாற்றும் அமைப்புக்கள் பற்றி---

  • தலைவர்-தூய ஆனாள் கலாமன்றம்-வங்காலை மன்னார்
  • செயலாளர்- வங்காலை புனித ஆனாள் ஆலய அருட்பணிப்பேரவை(அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் அருட்பணி ஜெயபாலன் குரூஸ்,அருட்பணி ஜெயபாலன் ஆகியோரின் சேவைக்காலங்களில்)
  • செயலாளர்- வங்காலை புனித ஆனாள்மத்திய மகா வித்தியாலய அபிவிருத்தி சபை(அருட்சகோதரர் விஜயதாசன் அருட்சகோதரர் சந்தியோகு அதிபர்களின் சேவைக்காலங்களில்)
  • செயலாளர்- வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்.
  • செயலாளர்- வங்காலை விவசாய அமைப்பு
  • செயலாளர்- வங்காலை இரத்தினபுரி கிராம அபிவிருத்தி சங்கம். போன்ற அமைப்புகளில் இருந்து சேவையாற்றி வருகின்றேன்.
தங்களது பணியில் சிறப்பானவை பற்றி…
அது மக்களின் பணியாக சுமார் 33 வருடங்களுக்கு மேலாக அரச பணியாற்றி இருக்கின்றேன். அப்படியே கலைப்பணியும் சமூகப்பணியும் ஆற்றி வருகின்றேன்.  1992ம் ஆண்டு வங்காலையின் தூய ஆனாள் கலாமன்றம்  ஒன்றை உருவாக்கி அதனை வடக்கு மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கிழ் பதிவு செய்ததுடன் பல திறமையான கலைஞர்களையும் படைப்புக்களையும் வெளிக்கொணர்ந்துள்ளேன்.
அத்துடன் எமது கலாமன்றத்திறகு மேலை நாட்டு இசைக்கருவிகளை பெற்றுக்கொடுத்து இசைக்குழு ஒன்றினையும் ஆரம்பித்துள்ளேன்.

தங்களின் வாழ்வில் கலைத்துறை-விவசாயம்-கிராமசேவகர் பணி இந்த மூன்றிலும் எது இலகுவானதாக உள்ளது……
  • கலைத்துறையை எடுத்துக்கொண்டால் நாடகங்கள் எழுதினாலும் அதைப்பழக்குவதற்கும் அதில் நடிப்பதற்கும் நடிகர்கள் இல்லை தற்போது நாடகங்களில் நடிக்க விருப்பம் இருந்தாலும் நடிக்க யாரும் வருவதில்லை அதற்கு நேரமும் இல்லை அத்தோடு சினிமாவின் மோகம் அதிகரிப்பும் தொலைபேசிப்பாவனையும் இவை எல்லாம் தாண்டி நாடகத்தினைமேடையேற்றுவது சவாலான விடையம் தான். 
  • கிராமசேவகர் பணி சுமார் 33வருடங்கள் சேவையாற்றியுள்ளேன் அன்று பாரிய சிக்கல்கள் பிரச்சினைகள் யுத்தகாலம் வளர்ச்சியற்ற நிலையில் ஒவ்வொரு அபிவிருத்திச்செயற்பாடுகளிலும் அரசியல்வாதிகளினதும் பணம்படைத்தவர்களினதும் தாக்கம் தலையீடு அதிகமாகவிருக்கும் அவற்றினைத்தாண்டித்தான் எமது சேவையினை நிறைவேற்றியுள்ளேன் அதுவும் சவாலான விடையமே…
  • விவசாயத்தினை எடுத்துக்கொண்டால் கொஞ்சம் இலகுவானதுதான் அன்று விவசாயம் இயற்கையானதுடன் பயிர்ச்செய்கை கடினமாக இருந்தது. ஆனால் தற்போது தொழிநுட்பங்களினால் விவசாயம் இலகுவானதுதான் ஆனாலும் இரசாயணப்பாவனைதான் மக்களின் ஆரோக்கியமானதாக இல்லை இது கவலையான விடையம்தான்…

இளைஞர் யுவதிகளுக்கான தங்களது அறிவுரை---
எமது பாரம்பரியங்களை பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு இளைஞர்களின் கையில்தான் உள்ளது. எமது கிராமத்தின் பழமையானதும் பாரம்பரியமானதுமான பெரிய நாடகம் மரிய சித்தாள் வாசாப்பு மேடையேற்றி வருகின்றோம். அதை தொடர்ச்சியாக செயலாற்ற எமது இளைஞர்களால்தான் முடியும் அவர்களுக்கு உறுதுணையாக நாம் இருப்போம் இந்த நவீனத்தில் நாம் எமது கலைகலாச்சாரபண்பாட்டினை இழந்துவிடக்கூடாது.

தங்களின் கலைவாழ்வில் சந்தோசமான விடையம் பற்றி…
கல்வாரியின் காவியம் திருப்பாடல்கள் காட்சியி சுமார் 06மணித்தியாளங்கள் கொண்டது முழுமையாக எனது நெறியாள்கையில் நானே எழுதி வெளியிட்டது மகிழ்ச்சியான விடையமே…இறுவட்டாக 02பகுதியாக வைத்துள்ளேன்.

தங்களது எதிர்கால ஆசையும் திட்டமும் பற்றி…
எனது ஆசையும் எதிர்காலத்திட்டமும் ஒன்றுதான் ஈழத்தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான பொப்பிசைப்பாடல் அழிந்து கொண்டு செல்கின்றது. எங்களது இளமைக்காலத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது.
பொப்பிசைப்பாடகர்களாக திருவாளர் ஏ.இ.மனோகரன் திருவாளர் அழகரெட்ணம் திருவாளர் அமுதன் அண்ணாமலை எம்.எஸ்.பெர்ணான்டோ போன்றவர்கள் சுமார் 05மணித்தியாலம் 06 மணித்தியாலம் பொப்பிசைக்கச்சேரிகள் நடத்தினார்கள் பார்த்து மகிழ்ந்து காலம் இனிமையானது. அதன் பின்பு 25வருடங்களுக்கு மேலாக தமிழீழ புரட்சிப்பாடல்கள் எமது தேச உணர்வை வளர்த்தது. தற்போது இந்தியா மற்றும் அந்நியதேசத்தின் பாடல்களையும் படங்களையும் நாம் பார்த்தும் கேட்டும் இரசித்தும் கொண்டு இருக்கின்றோம்.
 எமது அடையாளங்களை மறந்து. ஒரு வேளை இந்த சினிமாப்பாடல்களையும் படங்களையும்  ஒளிபரப்ப தடைவிதித்தால் என்ன செய்வீர்கள்…எனவே சினிமாப்பாடல்களை நம்பி இராமல் நாமே எமது அடையாளமாக இருந்து தமிழ் பொப்பிசைக்கு உயிர்கொடுப்போம்.அதற்கு எமது இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.எமது கலையை மறந்து விட்டு மற்றவர்களின் கலையை பின்பற்றுவதா…? கலை எனும் தமிழர்களின் கலை எல்லாம் ஒன்றுதான் ஆனாலும் ஈழத்தமிழர்களுக்கென்று உள்ள கலையை அழிந்து விடாமல் மீண்டும் புதியவடிவில் புத்துணர்ச்சிபெற எல்லோரும் முன்வரவேண்டும் அதற்கு நான் தயாராக உள்ளேன் என்னைப்போல் உள்ளவர்கள் ஒன்று சேரவேண்டும்.

மன்னார் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும்
நியூமன்னார் இணையம் பற்றி…

நியூமன்னார் இணையம் மன்னாரில் நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது. நான் எனது இத்தனை வருட கலைச்சேவையினை செய்துள்ளேன் ஆனாலும் என்னை யாரும் செவ்வி கண்டதில்லை முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள்  செவ்வி கண்டுள்ளீர்கள் நல்லதொரு செயலாகும். எனது குடும்பமும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். சமகாலத்தில் எம்மைப்போன்ற கலைஞர்களையும் இன்னும் மறைவாகவே இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணரவேண்டும் என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனத மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றும்.

நியூமன்னார் இணையத்திற்காக 
சந்திப்பு--கவிஞர்-வை.கஜேந்திரன்,BA












ஈழத்தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான பொப்பிசைப்பாடல் அழிந்து கொண்டு செல்கின்றது-சவிரியான் பற்றிக் லெம்பேட் Reviewed by Author on June 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.