மன்னார்-காட்டாஸ்பத்திரி கடற்கரையில் படகில் இருந்து 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு-
காட்டாஸ்பத்திரி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவினை புதன் கிழமை 27-06-2019 கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நேற்று புதன் கிழமை(26) காலை காட்டாஸ்பத்திரி கடற்கரையில் கடற்படையினர் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த படகை சோதனையிட்டுள்ளனர்.
-இன் போது குறித்த படகில் காணப்பட்ட பொதிகளை மீட்டு சோதனை செய்த போது குறித்த பொதியினுள் கேரள கஞ்சா காணப்பட்டுள்ளது.
9 பொதிகளில் 18 கிலோ 900 கிராம் நிறை கொண்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பேசாலை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று புதன் கிழமை(26) காலை காட்டாஸ்பத்திரி கடற்கரையில் கடற்படையினர் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த படகை சோதனையிட்டுள்ளனர்.
-இன் போது குறித்த படகில் காணப்பட்ட பொதிகளை மீட்டு சோதனை செய்த போது குறித்த பொதியினுள் கேரள கஞ்சா காணப்பட்டுள்ளது.
9 பொதிகளில் 18 கிலோ 900 கிராம் நிறை கொண்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பேசாலை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்-காட்டாஸ்பத்திரி கடற்கரையில் படகில் இருந்து 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு-
Reviewed by Author
on
June 29, 2019
Rating:

No comments:
Post a Comment