ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த மலையக கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த கட்சிகள், அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே கட்சி சார்பில் சாணக்கியன் எம்.பி., இவ்வாறு நன்றி தெரிவித்தார்.
” ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், செல்வம் அடைக்கலநாதன் தரப்பி உள்ளிட்ட கட்சிகள், குழுவினருக்கு நன்றிகள். அதேபோல ஹர்த்தால் வெற்றியளிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தக சங்கம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள்.” – என்று குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் 70 சதவீதமான கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழரசுக் கட்சி ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதால் கடைகளை மூடுமாறு எவரையும் பலவந்தப்படுத்த முடியாது. எனவே, ஹர்த்தால் தோல்வியென தெற்கில் உள்ள எவரேனும் கருதினால் வடக்க, கிழக்குக்கு வெளியில் உள்ள மாவட்டமொன்றில் முடிந்தால் 10 கிராம சேவகர் பிரிவுகளிலாவது ஹர்த்தாலை வெற்றிகரமாக முன்னெடுத்து காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.” – எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.
எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்று தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதே ஹர்த்தாலின் நோக்கம். மாறாக அதில் வேறு நோக்கங்கள் இருக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment