அண்மைய செய்திகள்

recent
-

சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! -


இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
கடந்த திங்கட்கிழமை அன்று, சந்திரயான் 2 விண்கலத்தினை இஸ்ரோ நிலவுக்கு அனுப்ப இருந்தது. ஆனால், விண்ணில் ஏவப்படுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், 22ஆம் திகதி (இன்று) மீண்டும் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டதால் இன்றைய தினம் சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தில் புறப்பட்ட இந்த விண்கலம், பூமியின் வட்டப் பாதைக்கு சென்றடைந்தது.
சந்திரயான் 2 விண்கலத்தினை சுமார் 978 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ வடிவமைத்தது. இது Orbiter, Lander மற்றும் Rover என மூன்று நிலைகளைக் கொண்டது ஆகும். பூமியின் வட்டப்பாதையை இந்த விண்கலம் 16 நிமிடங்களில் சென்றடைந்ததாக தெரிய வந்துள்ளது.
ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் 2 செலுத்தப்பட்டபோது, அங்கு இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோவை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! - Reviewed by Author on July 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.