அண்மைய செய்திகள்

recent
-

போராடி வீழ்ந்த இந்தியா.. 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி -


உலகக்கிண்ணம் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது.
உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் துடுப்பாட்டம் தெரிவு செய்தார்.

இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் தொடக்க வீரர்கள்களாக களம் இறங்கினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். ஜாசன் ராய் 66 ஓட்டங்களில் குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த அணித் தலைவர் இயான் மோர்கன்(1), ஜோ ரூட்(44), ஜோஸ் பட்லர்(20), வோக்ஸ்(7) என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார். இறுதியில், 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 338 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (0) ரன் எதுவும் எடுக்காம் அவுட் ஆனார். பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
விராட் கோஹ்லி 66 ஓட்டங்களில் பிளங்கெட் பந்து வீச்சில் அவுட் ஆனார். மறு முனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 102 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 32 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் டோனியுடன் ஜோடி சேர்ந்த பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஷர்திக் பாண்ட்யா 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டோனி 42 ஓட்டங்களுடனும் கேதர் ஜாதவ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் பிளங்கெட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.




போராடி வீழ்ந்த இந்தியா.. 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி - Reviewed by Author on July 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.