அண்மைய செய்திகள்

recent
-

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டுவது எப்படி? -


உடல் எடை கூடியவர்கள் குறைக்க நினைப்பவர்கள் போல தான் உடல் எடை குறைந்தவர்கள் எடையை கூட்டுவதற்கு ஒரு பக்கம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாகுவதுண்டு.
அந்தவகையில் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
  • முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.
  • வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது.
  • தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.
  • தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பிரட் வாங்கும் போது, கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.
  • காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.
  • பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
  • வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
  • கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டுவது எப்படி? - Reviewed by Author on July 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.