அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியா - ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: கப்பல் கேப்டனை கைது செய்த பொலிஸ் -


பிரித்தானியா ராயல் கடற்படையினரால் கடந்த வாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பலின் கேப்டன் மற்றும் தலைமை அதிகாரியை ஜிப்ரால்டரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சிரியாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து சென்ற ஈரான் நாட்டு கப்பலை பிரித்தானியா அதிகாரிகள் சிறைபிடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான் மூத்த இராணுவ அதிகாரி, இந்த செயலுக்கு பழிவாங்கும் விதமாக பிரித்தானியாவின் எண்ணெய் கப்பலை சிறைபிடிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்தார்.

அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக முன்னேறிய பிரித்தானியாவின் எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ் 23 வகை போர் கப்பலை, மூன்று ஈரானிய ஆயுத கப்பல்கள் நேற்று சுற்றி வளைத்ததாகவும், அதனை ​​ராயல் கடற்படை போர்க்கப்பல் விரட்டியதாக செய்தி வெளியானது.
இதனை உறுதி செய்யும் விதமாக அப்பகுதியில் இருந்த அமெரிக்க விமானம் சம்பவத்தின் வீடியோவை பதிவு செய்ததாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரோந்து படகுகளை இயக்கி வருவதாகக் கருதப்படும் ஈரானிய புரட்சிகர காவல்படை, இந்த சம்பவத்தை மறுத்தது. ஏதேனும் கப்பல்களைக் கைப்பற்ற உத்தரவு வந்திருந்தால் அது உடனடியாக நடந்திருக்கும் என்று கூறியது.
ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஜரீஃப், பிரித்தானியாவின் செயல் "பயனற்றது", "பதற்றத்தை உருவாக்க" செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலே, பிரித்தானியா ராயல் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பலின் கேப்டன் மற்றும் தலைமை அதிகாரியை கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பிரித்தானியா கப்பல்கள் எதுவும் ஈரான் வழியாக செல்ல வேண்டாம் எனவும், கப்பல்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் பிரித்தானிய கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பிரித்தானிய கடற்படை, "ஆவணங்களை சரிபார்க்கும் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. கிரேஸ் 1 கப்பல் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு மந்திரி எண்ணெய் டேங்கரை விடுவிக்கக் கோரியதைத் தொடர்ந்து இந்த கைது நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியா - ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: கப்பல் கேப்டனை கைது செய்த பொலிஸ் - Reviewed by Author on July 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.