அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகள் டிசம்பர் மாதத்தினுள் முழுமையாக்கப்படும்.

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப்பணிகள் அணைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தினுள் முழுமையாக்கப்படும் என நகர திட்டமிடல் அதிகார சபையின் திட்ட பணிப்பாளர் ஜெமுனு பிரேம ரட்ண தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் இடை நடுவில் கெவிடப்பட்டுள்ள நிலையில்,பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் மன்னார் நகர சபை,நகர திட்டமிடல் அதிகார சபை(யூ.டி.ஏ) மற்றும் மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்கம் ஆகியவற்றிற்கு இடையில் நேற்று திங்கட்கிழமை  மன்னார் நகர சபையில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது அருட்தந்தை நேரு அடிகளார், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட்,நகர சபையின் உப தலைவர் , உறுப்பினர்கள்,நகர சபையின் உத்தியோகஸ்தர்கள், நகர திட்டமிடல் அதிகார சபையின் திட்ட பணிப்பாளர் ஜெமுனு பிரேம ரட்ண,பணியாளர்கள், மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்க பிரதி நிதிகள், பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழக பிரதி நிதிகள், பள்ளிமுனை கிராம மட்ட பிரதி நிதிகள் என பலர்கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் நகர சபையின் தலைவவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,,,

மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தி பணிகளில் பாரிய பிழைகள் மற்றும் குறைபாடுகள் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையினராகிய நாங்களும் நேரடியாக அவதானித்துள்ளோம். பல்வேறு தரப்பினரினாலும் பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அதற்கு அமைவாக குறித்த கலந்துரையால் ஏற்பாடு செய்யப்பட்டது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மன்னார் நகர சபையின் புதிய சபை வந்த காலத்தில் இருந்து தெரியப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

குறித்த விளையாட்டு மைதானத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நகர திட்டமிடல் அபிவிருத்தி அதிகார சபைக்கு பல தடவைகள் எடுத்தக்காட்டப்பட்ட போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக இல்லை.கடந்த ஏப்பிரல் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதி நிதிகளைக் கொண்ட குழுவினர் வருகை தந்து பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டனர்.

இதன் போது மைதானத்தில் உள்ள அனைத்து விதமான குறைபாடுகளையும், பிரச்சினைகளையும் நேரடியாக காட்டி இருந்தோம்.

அதன் போது அங்கு வருகை தந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி யூன் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேலைத்திட்டங்களையும் பூர்த்தி செய்து தருவோம் என்று.

ஆனால் ஒன்றும் இடம் பெறவில்லை.பல்வேறு தரப்பினரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைளுக்கு அமைவாக மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்கத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்தின் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

குறித்த விளையாட்டு மைதானத்தின் பிரச்சினை தொடர்பாக  மன்னார் நகர சபை தொடர்பில் வெளிவரும் பிழையான கருத்துக்களை நாங்கள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது.அதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும்.குறித்த விளைபாட்டு மைதானம் பூர்த்தியாக்கப்பட்டு எம்மிடம் பாரப்படுத்தப்பட வேண்டும்.  பள்ளிமுனை சென் லூசியா விளையாட்டுக்கழகம் என்பது இலங்கையில் புகழ் பெற்ற விளையாட்டுக்கழகங்களில் ஒன்று.

ஆனால் இன்று இந்த கழக வீரர்கள் உரிய முறையில் பயிற்சியை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறித்த மைதானம் காணப்படுகின்றது.எனவே உரிய அதிகாரிகள் குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது பல்வேறு தரப்பினரும் குறித்த மைதானம் தொடர்பில் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த நகர திட்டமிடல் அதிகார சபையின் திட்ட பணிப்பாளர் ஜெமுனு பிரேம ரட்ண,,,

நகர திட்டமிடல் அதிகார சபை குறித்த விளையாட்டு மைதானத்தில் உள்ள பிழைகள் தொடர்பில் விசேட குழு ஒன்றை நியமித்து நடவடிக்கைளை மேற்கொள்ளும்.

-குறித்த மைதானத்தின் வேளைத்திட்டங்களை ஆரம்பிக்க கேள்வி கோரலின் அடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு குறித்த மைதான்ததின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டும்.

-டிசம்பர் மாதம் குறித்த வேலைத்திட்டங்கள் முழுமையாக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் ஒப்படைக்கப்படும் என என நகர திட்டமிடல் அதிகார சபையின் திட்ட பணிப்பாளர் ஜெமுனு பிரேம  தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகள் டிசம்பர் மாதத்தினுள் முழுமையாக்கப்படும். Reviewed by Author on July 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.