அண்மைய செய்திகள்

recent
-

வங்காலை மண்ணின் 1வதும் மன்னார் மாவட்டத்தின் 02வது புவியியல் துறை பேராசிரியரும் கலாநிதியுமான S.A.சூசை ஆனந்தன்


கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில் நாட்டுக்கூத்துக்கலைஞரும் ஆய்வாளரும் வங்காலை மண்ணின் முதலாவதும் மன்னார் மாவட்டத்தின் 02வது புவியியல் துறை பேராசிரியரும் கலாநிதியுமான ஏ.எஸ்.சூசை ஆனந்தன் அவர்களின் அகத்திலிருந்து…

தங்களது கலையர்வம் பற்றி…
நான் சிறுவயதில் நன்றாக பாடுவேன் எனது குரல்வளத்தினால் பாடசாலையில் நடக்கின்ற அத்தனை நிகழ்ச்சிகளிலும் என்னை இணைத்துக்கொள்வார்கள் நானும் ஆர்வத்துடன் எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன் அப்படியே எனது நாடக ஆர்வம் படிப்படியாக வளர்ந்தது வளர்த்துக்கொண்டேன்.

தங்களது முதல் நாடகம் பற்றி---
எனது முதல் நாடகம் என்றால் 1967ம் ஆண்டு பாடசாலைக்காலத்தில் சங்கிலியன் நாடகத்தில் சங்கிலியன் மன்னனாக நடித்தேன் அன்றிலிருந்து  தொடர்ந்து பாடசாலைக்காலத்திலும்  நடித்தேன்  அதன் பின்பு பல்கலைக்கழகத்திலும் நடித்துள்ளான் எனது கலையார்வத்தால்  கடந்த ஆண்டும் மீண்டும் இலங்கேசன் நாடகத்தில்  நடித்ததோடு நெறியாள்கையும் செய்துள்ளேன் கலையார்வம் இன்னும்....

தாங்கள் பாத்திரமேற்று நடித்த நாடகங்கள் பற்றி- 
  • நடிகர், நாட்டடுக்கூத்து நடிகர். இயக்குநராக
  • பாதுகை என்ற  நாடகம்  கூனி வேடம்  1968
  • இலங்கேசன்  நாட்டுக்கூத்து  சீதை வேடம்  1969.
  • ஈழம் கண்ட சோழன் நாடகம்  அமைச்சர்  வேடம்  1977
  • ஒளி பிறந்தது நாடகம்  ஏரோது மன்னன் வேடம் 1976 
  • யாழ் பல்கலைக்கழகம்.பாஞ்சாலி  நாட்டடுக்கூத்து  சகுனி வேடம்  1978 
  • யாழ் பல்கலைக் கழகம். சங்கிலி யன்  நாடகத்தில்  சங்கிலியனாக பாடசாலை மட்டத்தில் 1967 இறுதியாக  யாழ் பல்கலைக்கழகத்தில்  இலங்கேசன்  நாட்டுக்கூத்து  இயக்குநராக 2018. மிகுந்த விருப்பத்துடன் செயலாற்றியுள்ளேன்

தங்கள்  பொதுச்சேவையின் மன்றங்களின் பங்களிப்பு பற்றி---
நான் பல அமைப்புகளின் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் 
  • தலைவர்  புனித  ஆனாள் விளையாட்டுக்கழகம்
  • வளர்கலைமன்ற உறுப்பினர். இவ்விரு மன்றங்களுடன் எனது கல்வித்துறைசார்ந்தும் செயற்பட்டு வருகின்றேன்.
  • 1993-2018   25 வருடங்கள்  யாழ் பல்கலைக்கழகம் புவியியல் துறைபேராசிரியராக கல்விச்சேவையாற்றியுள்ளேன். 
.தங்களால் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள் பற்றி.....

எனது துறைசார்ந்து தான் அதிகமாக எழுதியுள்ளேன் அதுவும் ஆங்கிலத்தில் தான் பல அய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளேன் குறிப்பாக
  • மீன்பிடி உபகரணங்களும் மீன்பிடி முறைகளும்
  • சமுத்திரவியல்
  • கச்சதீவு அன்றும் இன்றும்
  •  ஏனயவை ஆய்வுக்கட்டுரைகள் சிறு கையேடுகளாக வெளிவந்துள்ளது

தங்களது படைப்புக்களுக்கு  கிடைத்த விருதுகள் பற்றி---
ஆரம்ப காலங்களில்  பெற்ற விருதுகள் கைவசமும்  தற்போது இல்லை கைகளிலும் இல்லை ஆனால் சமுத்திரவியல் நூலுக்கான வட கிழக்கு  மாகாண சிறந்த  நூலுக்கான விருது  2004ல்.
பல்கலைக்கழக  உதைபந்தாட்ட அணித்தலைவர்  1978/79 இல்.
பல பாராட்டு நினைவுச்சின்னங்களும் உள்ளன யாழ்பல்கலைக்கழகம் புவியியல் துறைபேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற 03-04-2019 வேளையில் எனது மாணவர்களால் கௌரவிக்கப்பட்டேன்.


Siluvaithasan Augustine Sosai
      Vankalai, Mannar
Address for correspondence
           Thirunelvely Road no10/2, A
           Jaffna Sri Lanka

Employment Details:
Designation : Professor
Name of Organization:University of Jaffna
Department  : Geography

Educational Qualification:
B.A (Hons) in Geography 1976 - 1980, University of Jaffna.

 High Degree:
  • M.A in Geography in 1987, University of Jaffna
  • Dip. In Education in 1990, University of Jaffna
  • Ph.D in Fisheries Geography in 1998, University of Jaffna
Research publications in Refereed Journal

  •  Recent trends in Fisheries sector in Sri Lanka: A Review (Tamil) CINTANAI - Vol VIII, 1993, Faculty of Arts, University of Jaffna)
  •  Fisheries restrictions and fishermen encountered the problems in the Jaffna Peninsula (Tamil)(CINTANAI, Vol XII, I, 2000 Faculty of Arts, University of Jaffna)
  • "Fisheries under fire. Impacts of war and challenges of reconstruction and development in Jaffna fisheries, Sri Lanka." By A.S.Sosai and Kristian Stokke.
  • Norwagean Journal of Geography - Vol. 60, No.3, September 2006, University of Oslo, Norway
  • "Jaffna Peninsula: present perspective and changes of fishing" The Sri Lanka journal of South Asian Studies No.10, New series - 2004, University of Jaffna
  • Fishing in Dire Straits: Trans boundary Incursion in the Palk Bay, Economic and Political Weekly, Volume XLVII No 25, Sameesksha Trust Publicatio, Mumbai, June 23 2012,

 Published papers                                                                                               .                .(i) 'Impediments in implementing the peace process in North East Sri Lanka'
Centre of peace studies Faculty of Social Science, University of Tromso, Norway 2003.(Rehabilitation in North East Sri Lanka organized by University of Tromso, Norway) 
 Unpublished papers:                                                                  , 
I"How High Security Zones Linder peace in Sri Lanka"Read the above paper at the conference "Peace and Place" 5th to 7th  April 2006 at University of Tromso, Norway in organize and               coordinated by the centre for peace studies, University of Tromso, Norway.

II."The fishery industry development in Northeast Sri Lanka" Presented the above programme seminar at NOARAGRIC, AS, 26th to 27th October 2005
Norwegian Forum for development coorperation in fisheries, Sri Lanka for beginners - organized Noragric, Agricultural University, Norway. 
III. "The situation of small scale fisheries in Mannar, Sri Lanka." Presented the above at the fisheries forum at Gjostetu, OS, Norway
10th to 11th April 2003.

IV. “Possible Areas of Collaboration and Mechanism for Education and Awareness Building      Including Networking for Sustainable Utilization of Gulf of Mannar, BOBProgram, Second Bi-National Stekholder Consultation on Sustaining the Gulf of Mannar Eco-System and Its Resources, 18-22 June 2012.
V.“Recent Development in the Fisheries Sector in the Northern Region”, National Geographic Conference held by   University of Sri Jeyawardenapura, 11-12 March, 2011.
VI. India – Sri Lanka Fishing Issue, Organized by Observer Research Foundation, New Delhi, 18 – 19 July 2011.

Book Publication in Fisheries:-
Title of books:  
a)"Oceanography", Published on 2005 (in Tamil)
 b)"Fishing Gears and Fishing Methods" - Published on 2009  (in Tamil) - ISPN 978-955-9194-18-7
c) Books to be used for supplementary n ading:
 "Kachchativu Antrum - Intrum" (in Tamil) - 1995.(Second Edition 2009)

 Research Experience-
Understanding the Obstacles and Opportunities in Post War Recovery for Fishing Households in Palk Bay, Research Project REINCORFISH: Providing Space for Small Scale Fisheries in the Sustainable Development of Fisheries in South Africa and South Asia, 2011.

Progress Report  for  REINCORPFISH-2014

Professor.A.S.Sosai,Department of Geography,University of Jaffna

As a Coordinator REINCORPFISH
I have furnished details regarding my work in the year 2013/2014

Details of work
Research work;

1,Title of the paper: “ ILLEGAL FISHING METHODS AND IT’S IMPACTS  ON FISHING  COMMUNITY:A  CASE  STUDY OF MANNAR DISTRICT SRI LANKA”.

The above research paper was submitted to 1st International Conference on Cotemporary Management (ICCM-2014) Organized by Faculty of Commerce and Management Studies, university of Jaffna, on14-15 March,2014 at University of Jaffna, Sri Lanka.

2. Title of the Paper;
 “Post war Situation In the Fisheries Sector In the Jaffna District”,
The above paper was  presented by me   at the 13th Annual Symposium of the Centre for Poverty Analysis  at the  13thAnnualSymposiumo :Postwar Development in Asia and Africa 1-­3September 2014 Colombo, Sri Lanka.
3.Title of the paper:
“Socio, economic  Status of the Displaced People: A Case Study of the “KANNAKI”  Welfare Center in Vali- South-Jaffna,Sri Lanka”
The above paper presented by me and Miss.Vavavithja Balaraman at Jaffna University International Conference (JUICE-2014),organized by the University of Jaffna on December 19-20.2014 ,University of Jaffna Sri Lanka. 

Awreness program:-
a)Theme: “Fisher women Empowerment in the Mannar District”. Organized by “Center for Socio economic Development in Mannar District”,on  30th April 2014 at Madhu Church,
b)”Problems Faced by Fishermen in the Jaffna District” Organized by “Centre for Peace and Reconstuction”(CPR) ,on15th October 2014 at Passayoor, Jaffna.
I participated as a resource person in the above awareness programs.


மன்னாரின் தற்போது கடல்வளம் பற்றி--
என்ன சொல்வதற்கு இருக்கு எல்லாம் கைநழுவி போய்விட்டது
கடல் வளம் அழிந்தும் அழிக்கப்பட்டும்  கொண்டிருக்கின்றது இதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை மக்களாகிய நாமும் எமது அரசியல் பிரதிநிதிகளும் தங்களது அரசியல் நகர்வுக்கான காரணங்களாக பயன்படுத்துகின்றார்களே தவிர எதிர்கால சுவீட்சமான வழ்வுக்கு அல்ல
வெறும் மேடைப்பேச்சுக்காகவே
  • இந்திய மீனவர்களின் வருகை
  • தென்னிலங்கை மீனவர்களின் வருகை
  • தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள்
  • ரோலர் கொண்டு மீன்பிடித்தல் இவற்றின் மூலம் கடல்வளம் அழிவதோடு பொருளாதாரம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது அதுமட்டுமன்றி இனிவரும் எமது சந்ததியின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது..
  •  உண்மையை உணருமட்டும் ஒன்றும் எமக்கானதாய் இராது.
மன்னார் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும்
நியூமன்னார் இணையம் பற்றி…

 நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள்  செவ்வி கண்டுள்ளீர்கள். நல்லதொரு செயலாகும். எனது குடும்பமும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.  மன்னர் மண்ணின் தற்போது பல அபிவிருத்தி விடையங்கள் செய்ய வேண்டியுள்ளது உங்களைப்போன்ற மண்பற்றுள்ள ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் தான்  தெரிந்து வெளிப்படுத்தும் அரிய பணியாக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றும்.

நியூமன்னார் இணையத்திற்காக சந்திப்பு-
கவிஞர் வை.கஜேந்திரன்-BA












வங்காலை மண்ணின் 1வதும் மன்னார் மாவட்டத்தின் 02வது புவியியல் துறை பேராசிரியரும் கலாநிதியுமான S.A.சூசை ஆனந்தன் Reviewed by Author on August 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.