அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்கா வழங்கிய நிதி உதவியே அன்றி கடன் அல்ல: அமெரிக்க தூதுவர் -


மில்லேனியம் சேலேஞ்ச் திட்டத்தின் ஊடாக இலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலய்னா பீ.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சபையின் அமெரிக்க வர்த்தக பேரவையின் மூன்றாம் ஆண்டு மாநாட்டில உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கவும் அமைதி, நல்லிணக்கத்தை அதிகரிக்கவும் வலுவான அனைத்து அடங்கிய பொருளாதார வளர்ச்சி அவசியம் என அமெரிக்க நம்புகிறது. மில்லேனியம் சேலேஞ்ச் என்பது அபிவிருத்திக்காக நிதியுதவி வழங்கும் அமெரிக்காவின் நிறுவனம்.
அனைவரும் அடங்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசுக்கும் மக்களுக்கு அமெரிக்கா 480 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது அமெரிக்க மக்கள் வழங்கும் அன்பளிப்பே அன்றி கடனுதவியல்ல.

இது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்கும் கடன் அல்ல. இந்த நிதியுதவியின் மூலம் என்ன கிடைக்கும். போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றப்படும். இலங்கை அரச காணிகளின் நிர்வாகம் மறுசீரமைக்கப்படும். இவற்றினால், இலங்கையின் கடன் ஒரு ரூபாவினாலும் அதிகரிக்காது.

மில்லேனியம் சேலேஞ்ச் உதவி தொடர்பாக ஊடகங்களில் குறிப்பிடத்தக்களவு தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்குவரத்து, காணி நிர்வாகம் என்பன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான தடையாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான இது சம்பந்ததான உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் சகல துறைகளையும் கண்காணிப்பது மற்றும் நிர்வாகம் செய்வது என்பன இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும். இந்த உடன்படிக்கையின் கீழ் எந்த காணிகளையும் உரிமையாக்கவோ, நிர்வாகம் செய்யவோ எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு முடியாது.
திட்டத்தின் இறுதியில் அமெரிக்காவுக்கு அதிகமான காணி உரிமை கிடைக்கும் என ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகின்றன. நாம் வழங்கிய 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முற்பணம் எனவும் அந்த தகவல்களில் கூறுகின்றனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் ஹெலய்னா பீ.டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா வழங்கிய நிதி உதவியே அன்றி கடன் அல்ல: அமெரிக்க தூதுவர் - Reviewed by Author on August 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.