அண்மைய செய்திகள்

recent
-

விக்னேஷ்வரனுக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் டெனீஸ்வரன்!


வடமாகாண முன்னாள் முதலமைச்சர், அனந்தி சசிதிரன் மற்றும் சிவனேசன் ஆகியோர் எடுத்த சம்பளங்களும் கொடுப்பனவுகளும் மாகாண திறைசேரிக்கு செல்ல ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீதிமன்ற தீர்ப்பின் படி 2017ஆம் ஆண்டு ஆவணி மாதம்20ஆம் திகதி முதல் ஒரு சட்டவலுவற்ற அமைச்சர் வாரியத்தை முன்னாள் முதலமைச்சர் கொண்டு நடத்தியுள்ளார்.

சட்டவலுவற்ற அமைச்சர் வாரியத்தைச் சேர்ந்த முதலமைச்சர் அவர்களும், அனந்தி சசிதரன் அவர்களும், சிவனேசன் அவர்களும் எவ்வாறு அமைச்சர் சம்பளத்தை பெற முடியும்.
அடுத்த கட்ட நடவடிக்கையில் நான் இறங்க இருக்கின்றேன். ஒரு வலுவற்ற அமைச்சரவை சம்பளத்தை எடுக்க உரித்தற்றவர்கள். எடுத்திருக்கின்ற சம்பளம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளும் மாகாண திறைசேரிக்கு செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியான ஒரு தீர்ப்பு.
13ஆவது திருத்தச் சட்டத்தில் என்ன அதிகாரம் இருக்கிறது என்ற விடயங்கள் எல்லாம் சரியாக கையாளப்பட்டிருக்கிறது.
சாதாரண ஒருவர் முதலமைச்சராக இருந்து இந்த தவறை செய்திருந்தால் நான் அதனை பெரிது படுத்தியிருக்கமாட்டேன்.
ஆனால் எங்களது முதலமைச்சர் ஒரு நீதியரசர். மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு நீதியரசர். இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இருந்த ஒரு நீதியரசர். 13ஆவது திருத்தச் சட்டம் என்பது சொற்ப பக்கங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு திருத்தச் சட்டம்.

இந்த திருத்தச்சட்டத்தையே பார்த்து அதன்படி நிர்வாகம் செய்ய முடியாமல் போயிருக்கின்றார் என்றால் இவரது நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு அமைச்சரை நியமிக்கின்ற அல்லது நீக்குகின்ற அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது. ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையில் செய்ய முதலமைச்சர் தவறிவிட்டார்.
இன்று 13ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவித அதிகாரமும் இல்லை. இதைத் தான் தென்பகுதி அரசாங்கமும், நீதிமன்றங்களும் செய்கின்றது.
ஒரு அமைச்சரை நீக்குவதற்கு கூட முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லையே என முதலமைச்சர் தனது ஊதுகுழல்கள் ஊடாகவும், சில இணையத்தளங்கள் ஊடாகவும் மேற்கொண்டு வருகிறார்.
13ஆவது திருத்தச் சட்டத்தில் போதிய அதிகாரம் இல்லை என்பது வேறு விடயம். ஆனால் இருக்கின்ற அதிகாரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஒரு நியதிச் சட்டத்தை உருவாக்குவதற்கு இருக்கின்ற அதிகாரத்திற்குள் செயற்பட்டீர்களா?
அல்லது அதிகார சபையை உருவாக்குவதற்கு சரியாக செயற்பட்டீர்களா? நிதி மூலங்களை உருவாக்கிக் கொள்ளக் கூடிய விடயதானங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்தன. அதை நீங்கள் செய்தீர்களா?. எதுவும் செய்யவில்லை.
ஆனால் இதற்கு அப்பால் 13ஆவது திருத்தச்சட்டம் எமது இனத்திற்கான ஒரு தீர்வல்ல. அது முடிவல்ல. அதை தாண்டி செல்ல வேண்டும் என்பது எங்களது கட்சி சார்ந்து ஒரு நிலைப்பாடு. எங்களது மக்கள் சார்ந்த நிலைப்பாடும் அது தான்.
13ஆவது தீருத்தச் சட்டத்தின் கீழ் எல்லா அமைச்சர்களையும் முதலமைச்சர் நியமிக்கின்ற போது ஆவணங்களுடன் சென்று ஆளுநர் முன்னிலையில் பதவியேற்கலாம்.
அப்போது அதிகாரம் இல்லையா என்ற விடயம் இவர்களுக்கு கண் தெரியவில்லை. தற்போது அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை என கூறும் முதலமைச்சர் அமைச்சரை நியமிக்க ஏன் அங்கு சென்றீர்கள். அப்போது இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரம் இல்லை என்பது உங்களுக்கு தெரியவில்லையா.
ஒரு அமைச்சரை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் இலங்கையில் இருக்கின்ற 9 மாகாண முதலமைச்சர்களுக்கும் அதிகாரம் இருக்கின்றது. இந்த விடயத்தை சரியாக இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை.
இரண்டு தீர்ப்புக்களையும் முதலமைச்சர் இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. எனது இடைகால தடை தீர்ப்பிலேயே ஒரு இடம் வழங்கியிருந்தார்கள். டெனீஸ்வரனை நீக்கிய முறைமை பிழை. அவரை நேரடியாக முதலமைச்சர் நீக்க முடியாது. அமைச்சரை நியமிப்பதற்கு ஆளுநர் ஊடாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
அதேபோல் அமைச்சரை நீக்குவது எனில் அதற்கான சிபாரிசும் மத்திய அரசில் இருக்கின்ற ஆளுனரிடம் இருக்கிறது. மத்திய அரசில் பிரதமர் அமைச்சரை நியமிப்பது, நீக்குவது தொடர்பில் எவ்வாறு ஜனாதிபதியுடன் செயற்படுகின்றாரோ அதேபோல் தான் மாகாண அமைச்சரை நியமிப்பது மற்றும் நீக்குவது என்பவற்றிலும் ஆளூனருடன் முதலமைச்சர் இணைந்து செயற்பட வேண்டும்.
யார் யாரை அமைச்சர்களாக நியமிக்கின்றேன் என ஆளுனருக்கு முதலமைச்சர் பெயர் விபரங்களை வழங்குகின்ற போது ஆளுநர் தட்டிக் கழிக்க முடியாது. அவர் விதிமுறைக்கு அமைவாக சத்தியபிரமாணம் செய்து வைப்பார்.
அதேபோல் ஒரு அமைச்சரை நீக்குவது என்றால் முறைப்படி ஆளுநர் மூலம் செய்ய வேண்டும். முதலமைச்சர் நேரடியாக எனக்கு 2016ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 20ஆம் திகதி என்னை அமைச்சில் இருந்து நீக்குகின்றேன். அனைத்து பொறுப்புக்களையும் செயலாளரிடம் கொடுக்கும் படி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த எழுத்து மூல ஆவணம் நீதிமன்றத்தில் பி 12 என அடையாளமிடப்பட்டிருக்கின்றது. அந்தவொரு விடயம் தான் தவறானது. முதலமைச்சரின் சிபார்சின் பேரில் ஆளுநர் செய்ய வேண்டிய விடயத்தை முதலமைச்சர் செய்திருக்கின்றார் என்பதை வெளிப்படுத்துகிறது.
முதலமைச்சர் பதவி நீக்கும் விடயம் ஆளுனருக்கு சென்று ஆளுநர் முறைப்படி நீக்கியிருக்க வேண்டும். ஆளுநர் முறைப்படி வர்த்தகமானியில் பிரசுரிக்க வேண்டும். இந்த விடயங்கள் முறையாக செய்யவில்லை.
ஒரு முதலமைச்சர் இந்த விடயங்களைக் கூட விளங்கிக் கொள்ளாமல் நேரடியாக என்னை நீக்க முடியுமா? இதனை தான் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. அவ்வாறு நேரடியாக நீக்க முடியாது. அவ்வாறு நீக்கியமை பிழை என்பதை நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இது தவிர, நீதிமன்ற தீர்ப்பின் படி 2017ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் வடமாகாணத்தில் ஒரு சட்டவலுவற்ற அமைச்சர் வாரியத்தை கொண்டு நடத்திய பெருமை வடமாகாண முதலமைச்சருக்குரியது.
இடைக்கால தடையுத்தரவில் மூன்று அமைச்சர்களின் நியமனம் பிழை என்று சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் தான் இருக்க முடியும். நானும் அமைச்சராக இருந்தேன் என்றால் ஆறாக அமைந்து விட்டது.
ஆகவே நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாது இழுதடிப்பு செய்து கொண்டு வடமாகாண சபை முடியும் வரை வேண்டும் என்று அடாவடித்தனமாகவும், நீதியரசராக இருந்தும் நீதிமன்ற தீர்ப்பைக் கூட கனம்பண்ணவும் தவறியிருக்கின்றார்.
ஒரு சட்டவலுவற்ற அமைச்சர் வாரியத்தை கொண்டு நடத்தியுள்ளார். ஆகவே, சட்டமுரணான ஒரு அமைச்சர் வாரியம் நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு செயற்பட முடியும். முதலமைச்சர் அவர்களும், அனந்தி சசிதரன் அவர்களும், சிவனேசன் அவர்களும் எவ்வாறு அமைச்சர் சம்பளத்தை பெற முடியும்.

அடுத்த கட்ட நடவடிக்கை இது தொடர்பில் இறங்க இருக்கின்றேன். ஒரு வலுவற்ற அமைச்சரவை சம்பளத்தை எடுக்க உரித்தற்றவர்கள். எடுத்திருக்கின்ற சம்பளம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளும் மாகாண திறைசேரிக்கு செல்ல வேண்டும்.
அதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும். ஆளுனருடன் இணைந்து பிரதம செயலாளர் எடுக்க வேண்டும். இவர்கள் எடுக்கவில்லை என்றால் எவ்வாறு எடுக்க வேண்டும் என நடவடிக்கை எடுப்பதற்கும் நான் தயாராகவிருக்கின்றேன். என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டப்படியாக சொல்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ்வரனுக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் டெனீஸ்வரன்! Reviewed by Author on August 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.