அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சமாதானப் பாலத்தில் URI MANNAR CC இனால் சிரமதானம் -படங்கள்


URI MANNAR CC இனால் மன்னார் சமாதானப் பாலத்தில் காணப்பட்ட பொலித்தீன்கள் மற்றும் பிளாஸ்ரிக் 02- 08-2019 சிரமதானம் மூலம் சேகரிக்கப்பட்டு மன்னார் நகர சபை கழிவு அகற்றல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

URI யின் சமூக நலன்னோம்பல் வேலைத்திட்டத்தின் பொறுப்பாளர் திரு.சீ.யுகேந்திரா அவர்கள் தலமையில் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள், படையினர், கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டு சிரமதான வேலைகளில் ஈடுபட்டனர்.

எமது நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சணையாக கழிவுப்பொருட்களை மக்கள் உரிய வகையில் அகற்றுவதின்மையானது பாரிய பிரச்சனையாகவுள்ளது. எனவே மன்னாரின் எதிர்காலத்திற்கு பொலித்தீன்கள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு கொணருதல் தொடர்பாக சிரமதானத்தின் போது கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மக்கள் தமது கழிவுகளை உரியவாறு அகற்றுவது தொடர்பாக கரிசனை கொள்ளுதல் இன்றியமையாதவொன்று அத்துடன் கடல்வளம் பாதுகாக்கப்படுதல் போன்றவற்றினையும் கரிசனை கொள்ளல் வேண்டும்.

எதிர்கால சந்ததியினருக்கான வளமான அழகிய மன்னாரினை கையளிக்கும் நூரநோக்குடன் பல செயற்பாடுகள் புத்தாக்க சிந்தனையுடன் மன்னாரில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் அபிவிருத்திக்கு தடையாகவுள்ள காரணிகளை சர்வோதயத்துடன் இணைந்து ஆராய்ந்து அதனை குறுகிய காலங்களில் விரைவாக நிவர்த்தி செய்து கொள்ளவும் எதிர்பாக்கப்படுகின்றது.

அபிவிருத்தி தொடர்பாக மக்கள் கொண்டுள்ள விடயங்களை நளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதனை உறுதிப்படுத்தும் விதத்திலான மாற்றுச் சிந்தனைகளுக்கும் நாம் தயாராகவுள்ளோம்.

நாட்டின் அபிவிருத்திக்கு மன்னார் மாவட்டத்தில் காணப்படும் கழிவகற்றல் மற்றும் நிலையான வளர்ச்சிக்காக பாரிய வேலைத்திட்டங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் உரியவர்கள் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறன திறன்மிகு செயற்பாடுகள் தொடரும் மன்னாரின் அபிவிருத்தியும் வளமும் பேணுவதற்கு எல்லோரும்  இணையவேண்டும்.






















மன்னார் சமாதானப் பாலத்தில் URI MANNAR CC இனால் சிரமதானம் -படங்கள் Reviewed by Author on August 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.