அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்கா செல்லும் இளம் தமிழ் பொறியியலாளர்கள்...இவர்களின் கண்டுபிடிப்புக்கு வாக்களியுங்கள்-


மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச்சேர்ந்த  இரு இளம் பொறியியலாளர்களது முயற்சிக்கு உலகின் முதல் நிலை பொறியியல் கல்லூரியான அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகத்தினால் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

இவர்களது நீர் நிலைகளை தன்னியக்கமாகச் சுத்திகரிக்கும் கருவி MIT பல்கலைக்கழகத்தின் Solve Challenge இல் இறுதி அறுபதில் ஒன்றாகத் தெரிவாகியிருக்கின்றது. உலகெங்கும் இருந்து கிடைக்கப் பெற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து இவர்கள் தெரிவாகியிருக்கின்றார்கள்.

இவர்கள் இறுதிச் சுற்றுத் தெரிவிற்கு இம் மாதம் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக் கூட்டத்தொடரிற்கு செல்லவிருக்கின்றார்கள்.
இப்போது MIT இணையத்தளத்தில் பொது மக்கள் வாக்கிற்காக தொழில்நுட்பத் தீர்வுகள் திறந்திருக்கின்றது.
இவ் வாக்களிப்பில் வெற்றி பெற்றால் இவர்களுக்கு $2500 பணப் பரிசும், திட்டத்தை தொடர தொழில்நுட்ப உதவியும் MIT இடமிருந்து கிடைக்கும்.
உங்கள் நேரத்தில் ஒரு நிமிடத்தை செலவிட்டு இவர்களுக்கு வாக்களித்து உதவுங்கள்.
1. உங்கள் Facebook கணக்கை பயன்படுத்தி MIT இணையத்தளத்தில் Login செய்யுங்கள். இந்த link ஐ அழுத்தவும்: https://solve.mit.edu/login
2. Login செய்தவுடன் மீண்டும் இந்தப் பதிவுக்குத் திரும்புங்கள்.
3. இந்த link ஐ அழுத்துங்கள்: https://solve.mit.edu/challen…/healthy-cities/solutions/8990
4: அதில் இருக்கும் '  vote now ' பட்டனை அழுத்துங்கள்.
இளம்பொறியியலாளர்கள் வெற்றிபெற நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக நாமும் வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
அமெரிக்கா செல்லும் இளம் தமிழ் பொறியியலாளர்கள்...இவர்களின் கண்டுபிடிப்புக்கு வாக்களியுங்கள்- Reviewed by Author on September 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.