அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்-படம்

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (24) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

குறித்த தடை உத்தரவை மீறி   ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் நேற்று திங்கட்கிழமை (23) தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது பொதுமக்கள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவங்களை கண்டித்து மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

குறித்த சம்பவங்கள் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடையம். இந்து ஆலய வளாகத்திற்குள் அல்லது அதற்கு அருகாமையிலோ இவ்வாறான மனித உடல்கள் எறிக்கப்படுவதோ அல்லது புதைக்கப்படுவதோ இல்லை.ஆனால் நீதிமன்ற கட்டளையையும் மீறி புத்த பிக்குவின் உடல் தீத்தக்கேனிக்கு அருகாமையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் தென்பகுதியில் இருக்கின்ற சிங்கள மக்களும் இலங்கையில் இருக்கின்ற அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடையம் புத்த மத குருமாரின் உடல்களையோ அல்லது சிங்கள மக்களின் உடல்களையோ அடக்கம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

ஆனால் இந்து ஆலயத்திற்கு அருகாமையில் அல்லது தீத்தக்கேனியில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டமையினை கண்டித்தே எமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.

எனவே சட்டத்தரணிகளையும் பொது மக்களையும் தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
நீதிமன்றம் வழங்கிய கட்டளை தொடர்பில் தெரியப்படுத்தியதோடு,அருகாமையில் இருந்த பொலிஸாருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.

ஆனால் அதனை எல்லாம் தமது கவனத்தில் எடுக்காது அடிhவடியான செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளது.
எனவே தாக்குதல் சம்பவத்துடன் ஈடுபடடவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.உரிய நடவடிக்கைகள் எடுக்காது விட்டால் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இதே வேளை மன்னார் சட்டத்தரணிகள் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரனைகளுக்காக வந்த மக்கள் திரும்பிச் சென்றுள்ளதோடு, இன்றைய தினம் இடம் பெற இருந்த வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்-படம் Reviewed by Author on September 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.