அண்மைய செய்திகள்

recent
-

24 மணி நேரத்தில் 48 படுகொலைகள்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய கொடூர சம்பவம்


சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 48 பேர் அரக்கத் தனமாக படுகொலை செய்யப்பட்டதன் 25-வது ஆண்டை அக்டோபர் ஐந்தாம் திகதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் Fribourg மண்டலத்தின் மிகச் சிறிய கிராமம் Cheiry. இந்த கிராமமே கடந்த 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி உலக மக்களின் கவனத்தை தன் மீது திருப்பிக் கொண்டது.

தீ விபத்து தொடர்பில் எச்சரிக்கை மணி ஒலித்த போது, அந்த குட்டி கிராமம் உலக ஊடகங்களில் விவாத பொருளாக மாறும் என யாரும் கணித்திருக்க மாடார்கள்.
அந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த பண்ணை ஒன்று தீக்கிரையானதாகவே முதலில் கருதப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அங்கிருந்து 23 சடலங்களை கைப்பற்றினர்.
அந்த 23 சடலங்களும் வட்ட வடிவில் கிடத்தப்பட்டிருந்தது. பலரும் தலையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் கொல்லப்பட்ட 23 பேரும் Sun templars எனப்படும் ரகசிய குழுவை சேர்ந்தவர்கள் என பொலிசார் கண்டறிந்தனர்.

Cheiry கிராமத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்கும் முன்னர், அடுத்த சில மணி நேரத்தில் வாலெய்ஸ் மண்டலத்தின் Salvan கிராமத்தில் இருந்து அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
அங்குள்ள பண்ணை ஒன்றும் தீக்கிரையானதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 25 சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
இங்கு எவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை, மாறாக மதுவில் அதிக போதை மருந்து கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு விவகாரமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக கருதிய விசாரணை அதிகாரிகளுக்கு Sun templars எனப்படும் ரகசிய குழு மீதே சந்தேகம் வலுத்தது.
இந்த இரு சம்பவத்திலும், யார் யாரை கொலை செய்தார்கள் என்ற தகவல் இதுவரை மர்மமாகவே உள்ளது.

உலகமெங்கும் 400 உறுப்பினர்களை கொண்ட இந்த Sun templars ரகசிய குழுவானது முக்கியமாக சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தது.
சுவிட்சர்லாந்தில் அக்டோபர் 5 ஆம் திகதி நடந்த கொடூர கொலை சம்பவத்திற்கு பின்னரே Sun templars எனப்படும் ரகசிய குழு தொடர்பில் தகவல் வெளியானது.
அதன் பின்னர் நடந்த தீவிர சோதனைகளின் முடிவில் சில குடியிருப்புகளில் இருந்து ஆவணங்கள் மற்றும் காணொளி காடிகள் உள்ளிட்ட தரவுகளை பொலிசார் கைப்பற்றினர்.

1952 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த இந்த குழுவின் தலைமை பொறுப்புக்கு 1983 ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் லூக் ஜூரெட் வந்த பின்னரே இது ரகசிய குழுவாக உறுமாறியது.
இவரது சக தலைவரான Joseph di Mambro சுவிஸ் படுகொலை தொடர்பில் விரிவான ஒடியோ தகவல் ஒன்றை பதிவு செய்திருந்தது பின்னர் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்தில் 48 படுகொலைகள்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய கொடூர சம்பவம் Reviewed by Author on October 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.