அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையர் நிஷான் துரையப்பா -கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார்


கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பா தற்போது பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
பொலிஸ் துறையிடம் இருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் அதே நம்பிக்கையை எதிர்பார்ப்பதாக நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி குழுக்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார். அவர் சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

3000 காவலர்களை கொண்டுள்ள பீல் பிராந்திய பொலிஸுக்கு தலைமை அதிகாரியாக பணியாற்றுவது உண்மையிலேயே பெருமையான விஷயம். சிறப்பாக கடமையாற்றுவேன் என நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
நிஷ் என அழைக்கப்படும் நிஷான் துரையப்பா யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையாப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

கனடாவுக்கு குடியேறும்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் எனவும் தொடர்ந்து அங்கேயே வளர்ந்த நிஷான் துரையப்பா 1995 ஆம் ஆண்டு ஹால்டன் பிராந்திய பொலிஸ் துறையில் சாதாரண காவலராக பணியில் இணைந்தார்.
தற்போது பீல் பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையர் நிஷான் துரையப்பா -கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் Reviewed by Author on October 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.